ஒலிம்பிக்ஸ்

கனவு நனவானது: வெள்ளி மங்கை மீராபாய்

24th Jul 2021 04:00 PM

ADVERTISEMENT


கனவு நனவானதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் பளு தூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு சனிக்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். 

வெற்றி குறித்து மீராபாய் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"உண்மையில் கனவு நனவான தருணம். இந்தப் பதக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்தப் பயணத்தின்போது உடனிருந்த கோடிக்கணக்கான இந்தியர்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி. நிறைய தியாகங்களைச் செய்து என் மீது நம்பிக்கை வைத்தமைக்கு குடும்பத்தினருக்கு, குறிப்பாக என் அம்மாவுக்கு நன்றி.

ADVERTISEMENT

மேலும் எனக்கு ஆதரவாக இருந்த அரசுக்கு நன்றி. விளையாட்டுத் துறை அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பு, ரயில்வே, விளம்பரதாரர்கள் உள்ளிட்டோரின் தொடர்ச்சியான ஆதரவுக்கும் நன்றி.

தொடர்ச்சியான கடின உழைப்பு, ஊக்குவிப்பு மற்றும் பயிற்சிக்காக எனது பயிற்சியாளர் விஜய் சர்மா மற்றும் உதவி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது சிறப்பு நன்றிகள்."

Tags : olympics
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT