ஒலிம்பிக்ஸ்

குழந்தையின் இதய அறுவைச் சிகிச்சைக்காக ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து வீராங்கனை

20th Aug 2021 02:43 PM

ADVERTISEMENT

போலந்து நாட்டைச் சேர்ந்த ஈட்டு எறிதல் வீராங்கனை தனது குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக தான் வென்ற ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட்டுள்ளார்.

போலந்து நாட்டைச் சேர்ந்த 25 வயதான ஈட்டி எறிதல் வீராங்கனை மரியா மக்டெலானா. இவர் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். 

இதையும் படிக்க | ரஞ்சி கோப்பை அட்டவணை மாற்றம்

இந்நிலையில் கடந்த வாரம் தனது முகநூல் பக்கத்தில் தனது 8 மாதக் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை விற்பனை செய்வதாக அறிவித்தார். இதன்மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு உடனடியாக அமெரிக்காவில் தனது குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | பி.டி. உஷாவும் பயிற்சியாளர் நம்பியாரும்: நினைவுகளை மீட்டெடுக்கும் புகைப்படங்கள்

இதனை அறிந்த ஒரு தொண்டு நிறுவனம் அவரது பதக்கத்தை 1.25 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுக்க முன்வந்தது. எனினும் மரியாவின் தியாகத்தை போற்றும் விதமாக அவரது பதக்கதை அவருக்கே திருப்பியளிக்க முடிவு செய்து தொண்டு நிறுவனம் அதனை அவரிடம் ஒப்படைத்தது.

அன்பு மற்றும் கருணை நிறைந்த இந்த சம்பவமானது தற்போது அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.  
 

ADVERTISEMENT
ADVERTISEMENT