ஒலிம்பிக்ஸ்

விமான நிலையத்தில் லவ்லினாவை வரவேற்ற அசாம் முதல்வர்

12th Aug 2021 10:52 AM

ADVERTISEMENT

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய லவ்லினா போா்கோஹெய்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா வரவேற்றார்.

அசாம் மாநிலத்திருந்து டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் மகளிருக்கான 69 கிலோ பிரிவு குத்துச்சண்டை போட்டியில் லவ்லினா போா்கோஹெய்ன் (23) பங்கேற்றார்.

இந்நிலையில், குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய லவ்லினா தோல்வியடைந்ததால் அடுத்த சுற்றில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றாா்.

இதன்பின்னர், ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற வீரர்களுடன் தில்லி வந்த லவ்லினா இன்று காலை கவுகாத்தி விமான நிலையம் வந்தார். இந்நிலையில், விமான நிலையத்திற்கு நேரில் சென்று அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, லவ்லினாவை வரவேற்றார்.

ADVERTISEMENT

அதன்பின் அசாம் முதல்வர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

பெருமையுடன் ஒலிம்பிக் பதக்கம் வென்ற நட்சத்திர வீராங்கனை லவ்லினாவை நான் வரவேற்றேன். ஒலிம்பிக்கில் அவர் பதக்கம் வென்றதன் மூலம் கோடிக்கானவர்களின் கனவை நிறைவேற்றியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களிலிருந்து விளையாட வருபவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார் எனத் தெரிவித்தார்.

Tags : Lovlina Borgohain Himanta B Sarma
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT