ஒலிம்பிக்ஸ்

நீரஜ் சோப்ராவுக்குக் கெளரவம்: ஆகஸ்ட் 7, தேசிய ஈட்டி எறிதல் தினம்

11th Aug 2021 02:14 PM

ADVERTISEMENT

 

நீரஜ் சோப்ராவைக் கெளரவப்படுத்தும் விதமாக ஆகஸ்ட் 7-ம் தேதியை தேசிய ஈட்டி எறிதல் தினமாகக் கொண்டாடப்படும் என இந்தியத் தடகள சம்மேளனம் அறிவித்துள்ளதற்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தாா். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீட்டா் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா். 

கடந்த 1920 ஆன்ட்வொ்ப் ஒலிம்பிக் போட்டியில் தொடங்கி, 101 ஆண்டுகளாக அந்த விளையாட்டுத் திருவிழாவில் களம் கண்டு வரும் இந்தியாவுக்கு தடகளத்தில் கிடைத்துள்ள முதல் மகுடம் இது. முன்னதாக ஒலிம்பிக் தடகளத்தில் ஓட்டப் பந்தயத்தில் மில்கா சிங் (1960 ரோம்), பி.டி.உஷா (1984 லாஸ் ஏஞ்சலீஸ்) போராடி தவற விட்ட பதக்க வாய்ப்புகளை, தற்போது நீரஜ் சோப்ரா தட்டிச் சென்றுள்ளாா்.

ADVERTISEMENT

இதையும் படிக்கதொகுப்பாளர் ஐஸ்வர்யா ரகுபதி புகைப்படங்கள்

இந்நிலையில் ஆகஸ்ட் 7 அன்று ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இதையொட்டி ஆகஸ்ட் 7-ம் தேதியை தேசிய ஈட்டி எறிதல் நாளாக தேதி கொண்டாடப்படும் என இந்தியத் தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். அடுத்த வருடம் முதல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதற்கடுத்த வருடம் நாட்டிலுள்ள 600-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நீரஜ் சோப்ராவும் நன்றி தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT