ஒலிம்பிக்ஸ்

ஹாக்கி: போராடி வீழ்ந்தது இந்தியா

DIN


மகளிர் ஹாக்கியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் உலகின் 2-ஆம் நிலை அணியான ஆர்ஜென்டீனாவிடம் வீழ்ந்தது. 
தனது ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி வரை முன்னேறியிருந்த இந்திய மகளிர் அணி, அடுத்ததாக வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்தை வெள்ளிக்கிழமை சந்திக்கிறது.  அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சார்பில் குர்ஜித் கெüர் 2-ஆவது நிமிஷத்திலும், ஆர்ஜென்டீனா தரப்பில் மரியா பாரியோனியுவோ 18, 36-ஆவது நிமிஷங்களிலும் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோலடித்தனர். 
ஆட்டத்தில் அருமையாக விளையாடிய இந்தியா ஆர்ஜென்டீனாவுக்கு வெற்றியை எளிதாக விட்டுக்கொடுத்துவிடவில்லை. இரு அணிகளுக்கும் இருந்த ஒரே வித்தியாசம், நடுகள ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா சற்று சிறப்பாகச் செயல்பட்டது தான். இறுதிக்கட்டத்தில் இந்திய அணியினர் தாக்குதல் ஆட்டம் தொடுப்பதற்கு பதிலாக, தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதும் சற்று பின்னடைவானது. 
பிரதமர் பாராட்டு: அரையிறுதியில் தோல்வி கண்ட இந்திய மகளிருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் பதிவிட்டார். அவர்களது ஆட்டத்துக்காக பாராட்டு தெரிவித்த பிரதமர், இந்திய பயிற்சியாளர் ஜோர்ட் மாரிஜ்னேவை தொலைபேசியில் அழைத்து வெண்கலப் பதக்க ஆட்டத்துக்காக இந்திய அணியினருக்கு வாழ்த்துகளும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT