ஒலிம்பிக்ஸ்

தடகளம்: நீரஜ் சோப்ரா அசத்தல்

DIN

ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தனது தகுதிச்சுற்றில் முதல் முயற்சியிலேயே 86.65 மீட்டர் தூரம் எறிந்து இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார். இந்தியாவின் ஒலிம்பிக் வரலாற்றில் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும். 
15 போட்டியாளர்கள் பங்கேற்ற "ஏ' பிரிவு தகுதிச்சுற்றில் அவரே முதலிடம் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது. தங்கம் வெல்வார் என்று கணிக்கப்பட்டுள்ளவரும், 2017-இல் உலக சாம்பியன்ஷிப் வென்றவருமான ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹன்னஸ் வெட்டரை விட 1.01 மீட்டர் தூரம் அதிகமாக எறிந்துள்ளார் நீரஜ். எனவே, இறுதிச்சுற்றிலும் அவர் பதக்கம் வெல்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவே தெரிகிறது. 
தகுதிச்சுற்று நிறைவுக்குப் பிறகு பேசிய நீரஜ் சோப்ரா, "எனது முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் உணர்வு மிக நன்றாக இருக்கிறது. "வார்ம்-அப்'-இன் போது எனது முயற்சிகள் திருப்தி அளிப்பதாக இருக்கவில்லை. ஆனால், தகுதிச்சுற்றில் முதல் முயற்சியிலேயே சிறப்பான இலக்கை எட்டியுள்ளேன். ஆனால் இறுதிச்சுற்று முற்றிலும் வேறான சூழலாக இருக்கும். உலகின் சிறந்த வீரர்கள் அங்கு பதக்கம் வெல்வதற்கான முயற்சியில் இருப்பார்கள். உடல் ரீதியாக நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், மனோ ரீதியாக இன்னும் தயாராக வேண்டியுள்ளது. எனது முயற்சியில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். தகுதிச்சுற்றில் செயல்பட்டதைப் போலவே, இறுதிச்சுற்றிலும் சிறப்பான இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும்' என்றார். 
சிவபால் ஏமாற்றம்: ஈட்டி எறிதலில் பங்கேற்றிருந்த மற்றொரு இந்தியரான சிவபால் சிங், "பி' தகுதிச்சுற்றில் 76.40 மீட்டர் தூரம் எறிந்து 16 வீரர்களில் 12-ஆவது இடத்தைப் பிடித்தார். 83.50 மீட்டரை எட்டுவோர் அல்லது இரு தகுதிச்சுற்றுகளிலுமாக சிறந்த இடங்களைப் பெற்ற 12 பேர் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறுவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT