ஒலிம்பிக்ஸ்

டோக்கியோ ஈட்டி எறிதல்: இந்திய வீரர் முதல் முயற்சியிலேயே இறுதிச்சுற்றுக்கு தகுதி

4th Aug 2021 09:00 AM

ADVERTISEMENT


டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலேயே இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியின் இன்றைய ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் வீரர்  நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

இந்தப் போட்டியில் 86.65 மீட்டர் தூரம் அசுரமாக எறிந்து அசத்திய நீரஜ் சோப்ரா, தனது முதல் முயற்சியிலேயே இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

பின்லாந்தின் லஸ்ஸி எட்லடலோ முதல் முயற்சியிலேயே தானாக தகுதி பெற்ற மற்றொரு வீரராவர்.

ADVERTISEMENT

இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியின் ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு நீரஜ் சோப்ரா முன்னேறியுள்ளார்.

ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்று ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT