ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் லவ்லினா: அரையிறுதியில் தோல்வி

4th Aug 2021 11:28 AM

ADVERTISEMENT

 

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதியில் தோல்வியடைந்தார் இந்தியாவின் லவ்லினா போகோஹெயின். எனினும் அவர் அரையிறுதிக்குத் தகுதி பெற்றதால் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். 

இன்று காலை நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ பிரிவின் அரையிறுதிப் போட்டியில் துருக்கியின் புஷானெஸ் சுர்மெனலியை எதிர்கொண்டார் லவ்லினா. துருக்கி வீராங்கனை சிறப்பாக விளையாடி 5-0 என லவ்லினாவைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் தோல்வியடைந்த லவ்லினா இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தவறவிட்டார். இருப்பினும், அரையிறுதிக்குத் தகுதி பெற்றதால் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதனால் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் கிடைத்தது. இதுவரை இந்தியா 1 வெள்ளி 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT