ஒலிம்பிக்ஸ்

இந்தியாவின் லவ்லினாவுக்கு ஒலிம்பிக் வெண்கலம்: பிரதமர் மோடி வாழ்த்து

DIN

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதியில் தோல்வியடைந்தார் இந்தியாவின் லவ்லினா போகோஹெயின். எனினும் அவர் அரையிறுதிக்குத் தகுதி பெற்றதால் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். 

இன்று காலை நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ பிரிவின் அரையிறுதிப் போட்டியில் துருக்கியின் புஷானெஸ் சுர்மெனலியை எதிர்கொண்டார் லவ்லினா. உலகின் நெ.1 வீராங்கனையான சுர்மெனலி சிறப்பாக விளையாடி 5-0 என லவ்லினாவைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

தோல்வியடைந்தாலும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றதால் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் 23 வயது லவ்லினா. ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டைப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்களான விஜேந்தர் சிங், மேரி கோம் ஆகியோருடன் அவர் இணைந்துள்ளார்.  

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம் கிடைத்தது. இதுவரை இந்தியா 1 வெள்ளி 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. 

வெண்கலம் வென்ற லவ்லினாவுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

நன்றாக விளையாடினீர்கள் லவ்லினா. குத்துச்சண்டை வளையத்தில் அவர் பெற்ற வெற்றிகள் இந்தியர்கள் பலருக்கும் ஊக்கமாக அமையும். அவருடைய மன உறுதி போற்றத்தக்கது. வெண்கலப் பதக்கம் வென்றதற்குப் பாராட்டுகள். எதிர்காலப் போட்டிகளுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT