ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி அரையிறுதி: இந்தியா - ஆர்ஜென்டீனா முதல் பாதியில் 1-1

4th Aug 2021 04:26 PM

ADVERTISEMENT

 

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் முதல் பாதியில் இந்தியா - ஆர்ஜென்டீனா அணிகள் தலா 1 கோல் அடித்து சமனில் உள்ளன. 

இந்திய மகளிா் ஹாக்கி அணி தனது காலிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதிபெற்றது. தனது ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி.

இன்று நடைபெற்று வரும் ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 2-வது நிமிடத்திலேயே கோலடித்து அசத்தியது இந்திய மகளிர் அணி. பெனால்டி கார்னரில் குர்ஜித் கெளர் கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பகுதியில் இந்திய மகளிர் அணி 1-0 என முன்னிலை பெற்றது. 

ADVERTISEMENT

2-வது பகுதியின் தொடக்கத்தில் பெனால்டி கார்னர் மூலமாக ஆர்ஜென்டீனா கோலடித்தது. இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. 

முதல் பாதியின் இறுதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமனில் உள்ளன. இதனால் ஆட்டத்தின் அடுத்த இரு பகுதிகளும் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT