ஒலிம்பிக்ஸ்

ஒலிம்பிக்ஸ் அரையிறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி: குடும்பத்தினர் உற்சாகம் (படங்கள்)

2nd Aug 2021 05:21 PM | முகேஷ் ரஞ்சன்

ADVERTISEMENT

 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஹாக்கியில் இந்திய அணி அரையிறுதிக்கு நுழைந்திருப்பது அவர்களுடைய குடும்பத்தினரையும் ஊர் மக்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

ஜார்கண்டைச் சேர்ந்த சலிமா, நிக்கி பிரதான் ஆகிய இருவரும் இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம்பெற்று ஒலிம்பிக்கில் ஆடி வருகிறார்கள். 

சிம்டேகாவின் பத்கிசபார் கிராமத்தைச் சேர்ந்தவர் சலிமா.  45 வீடுகள் மட்டுமே உள்ள அவருடைய கிராமத்தில் யார் வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது, ஒழுங்கான இணைய வசதியும் கிடையாது. இதனால் சலிமா விளையாடும் ஆட்டங்களை அவருடைய பெற்றோராலும் ஊர் மக்களாலும் பார்ப்பது கடினம். ஒலிம்பிக் ஆட்டங்களைப் பார்க்க வசதி செய்து தரவேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

சலிமாவின் பயிற்சியாளர் பிரதிமா பர்வா கூறியதாவது: என்னிடம் பயிற்சி பெற்ற சலிமா இன்று இந்திய அணிக்காக ஒலிம்பிக்ஸில் விளையாடுகிறார். இதனால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றார்.

நிக்கி பிரதானும் ஜார்கண்டைச் சேர்ந்தவர். ராஞ்சியிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள ஹெசால் கிராமத்தில் வசிப்பவர். இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு ஜார்கண்டிலிருந்து முதலில் தேர்வானவர். 

நிக்கி ஒலிம்பிக்ஸில் விளையாடும்போது தொலைக்காட்சியில் பார்ப்பதை விரும்ப மாட்டார் அவருடைய தாய் ஜீதன் பிரதான். மைதானத்தில் விளையாடும்போது நிக்கிக்குக் கீழே விழுந்து காயம் ஏற்பட்டுவிட்டால் அதைத் தன்னால் தாங்கமுடியாது என்கிறார். தன் மகள் தங்கம் வென்று வருவார் என மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார். 

நிக்கியின் பயிற்சியாளர் தஸ்ரத் மஹ்தோ கூறியதாவது: இந்திய அணி அரையிறுதிக்கு நுழைந்ததற்காக நிக்கியின் பெற்றோரைப் பாராட்ட வந்துள்ளேன். இது வரலாற்றுத் தருணம். இந்திய அணி தங்கம் வெல்லும் என நம்புகிறோம் என்றார். 

Tags : Jharkhand Hockey Tokyo Olympics
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT