ஒலிம்பிக்ஸ்

இந்திய ஹாக்கி வீராங்கனைகளின் கண்ணீரும் கொண்டாட்டமும்: உணர்வுபூர்வமான தருணங்களின் புகைப்படங்கள்

2nd Aug 2021 01:02 PM

ADVERTISEMENT

 

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வரலாறு படைத்துள்ளது. பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணியை 1-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்துள்ளது. 

ஒரு கட்டத்தில் முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறும் நிலையில் இருந்த இந்திய அணி இன்று அரையிறுதியில் விளையாடவுள்ளது.

இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மிகவும் வலுவான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. 22-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலமாக இந்தியாவின் குர்ஹித் கெளர் கோல் அடித்து அசத்தினார். இந்திய அணியின் தடுப்பாட்டம் இன்று மிகவும் சிறப்பாக இருந்தது. கோல் கீப்பர் சவிதா பல ஷாட்களைத் தடுத்து ஆஸ்திரேலிய அணியை ஒரு கோல் அடிக்கவும் விடாமல் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். இதனால் மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான ஆஸ்திரேலியாவை 1-0 என வீழ்த்தியது.

ADVERTISEMENT

2016-ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்தமுறை முதல்முறையாக அரையிறுதிக்கு நுழைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 

ஆட்டம் முடிந்த பிறகு நம்பமுடியாத இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியதால் உணர்ச்சிப்பெருக்கில் இருந்தார்கள் இந்திய வீராங்கனைகள். பலர் கண்ணீர் விட்டு அழுதார்கள். மறுபக்கம் இந்திய அணியிடம் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறிய ஆஸ்திரேலிய அணியினர் அதிர்ச்சியில் உறைந்தார்கள். இது எப்படி நடந்தது என்கிற உணர்வில் இருந்தார்கள். உணர்ச்சிக்கொந்தளிப்பில் இருந்த இந்திய வீராங்கனைகள் பிறகு சகஜமாகி, இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாட்ட ஆரம்பித்தார்கள். மைதானத்தில் அனைவரும் இணைந்து செல்பி எடுத்துக்கொண்டார்கள். அவர்களிடம் கரைபுரண்டு ஓடிய மகிழ்ச்சியை இந்தப் புகைப்படங்களின் வழியாகவும் காணலாம். 

Tags : olympics Hockey semifinals
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT