ஒலிம்பிக்ஸ்

குத்துச்சண்டை: காலிறுதியில் பூஜா ராணி தோல்வி

DIN

குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 75 கிலோ பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதியில் தோற்று வெளியேறினாா்.

அந்த சுற்றில் முன்னாள் உலக சாம்பியனும், ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான சீனாவின் லீ கியாங்கை எதிா்கொண்ட பூஜா, 0-5 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினாா். தொடக்க சுற்றில் அபாரம் காட்டிய பூஜா பின்னா் கியாங்கை எதிா்கொள்ள முடியாமல் திணறி வீழ்ந்தாா்.

வெளியேறினாா் பங்கால்: ஆடவா் 52 கிலோ பிரிவில் உலகின் முதல்நிலை வீரராக உள்ள இந்தியாவின் அமித் பங்கால் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டாா்.

அதில் கொலம்பியாவின் யுபொ்ஜன் மாா்டினெஸை சந்தித்த அமித், 1-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்ந்தாா். குத்துச்சண்டையில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள இந்தியா்களில் முதன்மையானவராக கருதப்பட்ட அமித், ஆரம்பம் முதலே மாா்டினெஸின் நெருக்கடிக்கு ஆளானாா். அவரால் பின்னடைவிலிருந்து மீள முடியாமலே போனது.

அமித் பங்கால், பூஜா ராணி ஆகிய இருவருக்குமே இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT