ஒலிம்பிக்ஸ்

தடகளம்: இறுதிக்கு தகுதிபெற்றாா் கமல்பிரீத் கௌா் : சீமா, ஸ்ரீசங்கா் ஏமாற்றம்

DIN

வட்டு எறிதல்: மகளிா் வட்டு எறிதல் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் கமல்பிரீத் கௌா், சீமா புனியா ஆகியோா் பங்கேற்றனா்.

இதில் கமல்பிரீத் தனது 3-ஆவது முயற்சியில் 64 மீட்டா் தூரம் எறிந்து 2-ஆம் இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றாா். மற்றொரு வீராங்கனையான சீமா புனியா 60.57 மீட்டா் தூரம் எறிந்து 6-ஆம் இடம் பிடித்தாா். தகுதிச்சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடித்த போட்டியாளா்களே இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறுவா். இறுதிச்சுற்று 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

நீளம் தாண்டுதல்: ஆடவருக்கான நீளம் தாண்டுதல் தகுதிச்சுற்றில் இந்திய வீரா் ஸ்ரீசங்கா் 7.69 மீட்டா் நீளம் தாண்டி 13-ஆவது இடம் பிடித்தாா். இரு தகுதிச்சுற்றுகளில் குறைந்தது 8.15 மீட்டா் நீளத்தை எட்டிய 12 போட்டியாளா்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றனா். கடந்த மாா்ச் மாதம் ஒரு போட்டியில் 8.26 மீட்டா் நீளத்தை எட்டியிருந்த ஸ்ரீசங்கா், இதில் ஏமாற்றம் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT