ஐபிஎல்-2020

ஹைதராபாதுக்கு முதல் வெற்றியா? டெல்லிக்கு ஹாட்ரிக்கா?

DIN

அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 11-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன. 

இரு அணிகளுமே தலா 2 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், டெல்லி வெற்றியையும், ஹைதராபாத் தோல்வியையும் மட்டுமே கண்டுள்ளன. எனவே டெல்லி அணி ஹாட்ரிக் வெற்றிக்காக இலக்கு நிர்ணயிக்க, ஹைதராபாத் முதல் வெற்றிக்கான முனைப்பில் உள்ளது. 

ஹைதராபாதை பொருத்தவரை, நடப்பு சீசனில் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத ஒரே அணியாக உள்ளது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பில் ஈடுபடாமல் இருப்பது அணிக்கான பின்னடைவுகளில் ஒன்றென கேப்டன் டேவிட் வார்னர் கருதுகிறார். குறிப்பாக ரித்திமான் சாஹா இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் தவிர்த்து இதர வீரர்களும் ரன்களை குவித்தால் மட்டுமே அணியின் ஸ்கோருக்கு பலம் சேர்ப்பதாக இருக்கும். எனவே, டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 

அந்த வகையில், காயத்திலிருந்து மீண்டுள்ள கேன் வில்லியம்சன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம். அவரை சேர்ப்பதானால், ஏற்கெனவே காயமடைந்த மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக அணியில் இணைக்கப்பட்ட முகமது நபியின் இடத்துக்கு தான் அவரை கொண்டுவர 
வேண்டியிருக்கும். 

சுழற்பந்துவீச்சில் ரஷீத் கான் சிறப்பாக பங்களிப்பு செய்கிறார். ஆனால் வேகப்பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் ஒருவர் ஹைதராபாத் அணிக்குத் தேவை. பிளேயிங் லெவனில் 4 வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பில்லி ஸ்டான்லேக்கை சேர்க்க வாய்ப்பில்லை. 

டெல்லி அணியைப் பொருத்தவரை, பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே மிகச் சரியாகச் செயல்பட்டு இரு வெற்றிகளை பதிவு செய்துள்ளது. பேட்டிங்கில் மூத்த வீரர் ஷிகர் தவன், பிருத்வி ஷாவுடன் இணைந்து அருமையான தொடக்கத்தை அளிக்கிறார். 

ரிஷப் பண்ட், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அதை அப்படியே தொடரச் செய்கின்றனர். ஷிம்ரன் ஹெட்மைரும் பேட்டிங்கிற்கு வலு சேர்க்கிறார். 
பந்துவீச்சை பொருத்தவரை ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் வேகப்பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை பதம் பார்க்கின்றனர்.

சுழற்பந்துவீச்சில் அஷ்வின் இல்லாத குறையை அக்ஸர் படேல், அமித் மிஸ்ரா தீர்க்கின்றனர். 

அஸ்வின் காயத்திலிருந்து மீண்டு வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும், அடுத்து ஒரு ஆட்டத்திலும் அவர் பங்கேற்கமாட்டார் என டெல்லி அணி தெரிவித்துள்ளது. 


ஹைதராபாத் (உத்தேச அணி)
டேவிட் வார்னர் (கேப்டன்), 
ஜானி பேர்ஸ்டோவ், 
கேன் வில்லியம்சன், மணீஷ் பாண்டே, ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, விராட் சிங், 
பிரியம் கர்க், ரித்திமான் சாஹா, 
அப்துல் சமத், விஜய் சங்கர், முகமது நபி, ரஷீத் கான், ஜேசன் ஹோல்டர், 
அபிஷேக் சர்மா, பவனாகா சந்தீப், 
சஞ்சய் யாதவ், ஃபாபியான் ஆலன், 
புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, 
சந்தீப் சர்மா, ஷாபாஸ் நதீம், 
சித்தார்த் கெளல், பில்லி ஸ்டான்லேக், டி.நடராஜன், பாசில் தாம்பி.

டெல்லி (உத்தேச அணி)
ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்),
ரவிச்சந்திரன் அஸ்வின், 
ஷிகர் தவன், பிருத்வி ஷா, 
ஷிம்ரன் ஹெட்மைர், ககிசோ ரபாடா, அஜிங்க்ய ரஹானே, அமித் மிஸ்ரா, 
ரிஷப் பண்ட், இஷாந்த் சர்மா, 
அக்ஸர் படேல், சந்தீப் லாமிஷேன், 
கீமோ பால், டேனியல் சாம்ஸ், 
மோஹித் சர்மா,  அன்ரிச் நோர்ட்ஜே, அலெக்ஸ் கேரி, அவேஷ் கான், 
துஷார் தேஷ்பாண்டே, 
ஹர்ஷல் படேல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், லலித் யாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT