ஐபிஎல்-2020

ஐபிஎல் போட்டியில் தடுமாறி வரும் பும்ரா!

DIN

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் இந்திய வீரர்கள் பலரும் திறமையை நிரூபித்து வரும் நிலைமையில் நட்சத்திரப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தடுமாறி வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சூப்பர் ஓவர் முறையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. 

துபையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பையும் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் அடிக்க, ஆட்டம் சமன் ஆனது. 

வெற்றியாளரை தீர்மானிக்கும் சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய மும்பை ஒரு விக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய பெங்களூர் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்து வென்றது. 

நேற்றைய ஆட்டத்தில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 42 ரன்கள் கொடுத்தார். அவர் பந்துவீச்சில் 4 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் அடிக்கப்பட்டன. முதல் இரு ஓவர்களை நன்றாக வீசி 9 ரன்கள் மட்டும் கொடுத்தார். ஆனால் அவர் வீசிய கடைசி இரு ஓவர்களில் 18, 17 ரன்கள் என மொத்தமாக 35 ரன்கள் அடிக்கப்பட்டன. 

எனினும் சூப்பர் ஓவரில் நம்பிக்கை வைத்து பும்ராவுக்கு வாய்ப்பளித்தார் ரோஹித் சர்மா. அதில் ஓரளவு நன்றாகப் பந்துவீசினாலும் 2 பவுண்டரிகள் கொடுத்ததால் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.

இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் பும்ரா மோசமாகவே பந்துவீசியுள்ளார். இதனால் தான் இந்த வருட ஐபிஎல் போட்டியில் மும்பை அணியால் ஆதிக்கம் செலுத்த முடியாமல் இரு ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது.

ஐபிஎல் 2020 போட்டியில் பும்ரா

vs சிஎஸ்கே - 1/43
vs கேகேஆர் - 2/32
vs ஆர்சிபி - 0/42

மேலும், இந்த ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்களை வழங்கி வருகிறார் பும்ரா. 3 ஆட்டங்களில் 9 சிக்ஸர்கள் பும்ரா பந்துவீச்சில் அடிக்கப்பட்டுள்ளன. சமீபத்திய வருடங்களில் இதுபோன்ற ஒரு நிலைமை அவருக்கு ஏற்பட்டதில்லை. 2017, 2019 ஆண்டுகளில் மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வென்றபோது பும்ரா பந்துவீச்சில் மொத்தமாக முறையே 9, 10 சிக்ஸர்கள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் நிலைமை தலைகீழாகி மூன்றே ஆட்டங்களில் 9 சிக்ஸர்களை வழங்கிவிட்டார்.

மலிங்காவும் இல்லாத நிலையில் பும்ராவின் மோசமான பந்துவீச்சு, மும்பைக்குப் பலத்த பின்னடைவாக உள்ளது. மீண்டு வர வேண்டும் பும்ரா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT