ஐபிஎல்-2020

களமிறங்குகிறார் பட்லர்: டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு

27th Sep 2020 07:15 PM

ADVERTISEMENT


கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 9-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் ஜெய்ஸ்வால், மில்லருக்குப் பதில் பட்லர், ராஜ்புத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ராஜ்புத் ராஜஸ்தானுக்காக களமிறங்குவது இதுவே முதன்முறை.

பஞ்சாப் அணியில் மாற்றம் எதுவுமில்லை. கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்குகிறது பஞ்சாப்.  

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT