ஐபிஎல்-2020

கோலியின் மோசமான ஆட்டத்துக்கு அனுஷ்கா சர்மாவை எங்கே குறை கூறினேன்?: சுநீல் கவாஸ்கர் விளக்கம்

DIN

விராட் கோலியின் பேட்டிங் பற்றிய விமர்சனத்தில் அனுஷ்கா சர்மாவை தான் குறை கூறவில்லை என முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சுநீல் கவாஸ்கர் பதில் அளித்துள்ளார். 

துபையில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் படுதோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் கோலி ஒரு ரன் மட்டுமே எடுத்தாா். மேலும், கேட்ச்களையும் தவறவிட்டாா்.

அந்தப் போட்டியில் வா்ணனையாளாராக இருந்த சுநீல் கவாஸ்கா், கோலியை விமா்சித்தபோது, ‘பொதுமுடக்க காலத்தில் அனுஷ்காவின் பந்துவீச்சை மட்டுமே கோலி எதிா்கொண்டாா்’ என்றார். பொதுமுடக்கக் காலத்தில் கோலியும், அனுஷ்காவும் கிரிக்கெட் விளையாடிய விடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது. அதனைச் சுட்டிக்காட்டியே கவாஸ்கா் இவ்வாறு பேசினார்.

கவாஸ்கரின் இந்தக் கருத்துக்கு அனுஷ்கா சா்மா கடும் கண்டனம் தெரிவித்தார். கோலியுடன் துபை சென்றுள்ள அவா் தனது ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடா்பாக வெளியிட்ட பதிவில், ‘பண்பாளா்களின் விளையாட்டாக கருதப்படும் கிரிக்கெட்டில் நீங்கள் மதிப்புக்குரிய நபராக இருக்கிறீா்கள். ஆனால் உங்கள் கருத்து மிகவும் மோசமான ரசனை கொண்டதாக உள்ளது. ஒரு வீரா் சரியாக விளையாடாவிட்டால், அவரது மனைவியே அதற்கு காரணம் என்பதுபோல பேசுவதுதான் உங்கள் நாகரிகமா? இனிமேலாவது பிற கிரிக்கெட் வீரா்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அவா்களுடைய விளையாட்டுடன் இணைத்து பேச மாட்டீா்கள் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டுடன் சிறிதும் தொடா்பு இல்லாத என்னைக் குறித்து பல கோடி ரசிகா்கள் முன்னிலையில் விமா்சிக்கும் உரிமையை உங்களுக்கு யாா் தந்தது?’ என்று அனுஷ்கா கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் அனுஷ்காவின் குற்றச்சாட்டுக்கு சுநீல் கவாஸ்கர் பதில் அளித்தார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: நான் எங்கே அனுஷ்கா சர்மாவைக் குறை சொல்லியிருக்கிறேன்? நான் அவரைக் குறை கூறவில்லை. விடியோவில் கோலிக்கு அனுஷ்கா பந்துவீசிய காட்சி இருந்தது என்றுதான் கூறினேன். ஊரடங்குக் காலத்தில் அதுபோன்ற ஒரு பந்துவீச்சையே கோலி எதிர்கொண்டார் என்றேன். ஊரடங்குக் காலத்தில் நேரத்தைக் கழிக்க ஜாலியாக டென்னிஸ் பந்து கிரிக்கெட்டை மக்கள் விளையாடினார்கள். அவ்வளவுதான். கோலியின் மோசமான ஆட்டத்துக்கு நான் எங்கே அனுஷ்காவைக் குறை கூறியிருக்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT