ஐபிஎல்-2020

ஷுப்மன் கில் அரைசதம்: கொல்கத்தா அசத்தல் வெற்றி

DIN


சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 8-வது ஆட்டத்தில் கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய அணிகள் இன்று (சனிக்கிழமை) மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 142 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 143 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தாவுக்கு நரைன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து மோசமான தொடக்கத்தை அளித்தார். ஆனால், ஷுப்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா பவுண்டரிகள் அடித்து ஹைதராபாத்துக்கு நெருக்கடியளித்தனர். பவுண்டரிகளில் மிரட்டி வந்த ராணா 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து நடராஜன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் ரஷித் சுழலில் சுக்கினார்.

இதனால், ஆட்டத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. எனினும், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் குறைவாக இருந்ததால், கில்லும், இயான் மார்கனும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு மெதுவாக ரன் சேர்த்தனர்.

இதனிடையில், கில்லும் தனது 42வது பந்தில் அரைசதத்தை எட்டி நம்பிக்கையளித்தார்.

இறுதியில் 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கில் 70 ரன்கள், இயான் மார்கன் 42 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூரில் 85 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

ரோட்டரி சத்தி டைகா்ஸ் சங்க ஆய்வுக் கூட்டம்

வெப்ப அலை: வெளியில் செல்வதைத் தவிா்க்குமாறு ஆட்சியா் வேண்டுகோள்

அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா

கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்தவரிடம் ரூ.1.13 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT