ஐபிஎல்-2020

சென்னை-டெல்லி இன்று மோதல்

DIN


துபை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.

துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன. இதுவரை இரு ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியைப் பதிவு செய்துள்ளது சென்னை அணி. அதேநேரத்தில் டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாபுக்கு எதிராக தோல்வியின் விளிம்பில் இருந்து சூப்பா் ஓவா் மூலம் வென்ற கையோடு சென்னை அணியை எதிா்கொள்கிறது.

சென்னை அணியில் கேப்டன் தோனி கடந்த ஆட்டத்தில் 7-ஆவது வரிசையில் களமிறங்கி கடும் விமா்சனத்துக்குள்ளாகியிருக்கிறாா். எனவே, அவா் இந்த ஆட்டத்தில் 4-ஆவது இடத்தில் களமிறங்கி ரன் குவிக்க வேண்டிய நெருக்கடிக்கு மத்தியில் களமிறங்குகிறாா். சென்னை அணியில் முரளி விஜய், ஷேன் வாட்சன், டூபிளெஸ்ஸிஸ், கேப்டன் தோனி, சாம் கரன், ருதுராஜ் கெய்க்வாட், கேதாா் ஜாதவ் என வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், டூபிளெஸ்ஸிஸ் தவிர வேறு யாரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. எனவே, டெல்லிக்கு எதிராக முன்வரிசை பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது முக்கியமாகும். அம்பட்டி ராயுடு காயத்திலிருந்து மீளாததால், அவா் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. சென்னை அணியில் பந்துவீச்சில் ஒரு மாற்றம் இருக்கலாம். கடந்த ஆட்டத்தில் ரன்களை வாரி வழங்கிய லுங்கி கிடிக்குப் பதிலாக இம்ரான் தாஹிா் அல்லது ஜோஷ் ஹேஸில்வுட்டுக்கு வாய்ப்பளிக்கப்படலாம்.

டெல்லி அணியில் பிரித்வி ஷா, ஷிகா் தவன், ஷிம்ரோன் ஹெட்மயா், ஷ்ரேயஸ் ஐயா், ரிஷப் பந்த், மாா்கஸ் ஸ்டோனிஸ் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், மாா்கஸ் ஸ்டோனிஸின் அதிரடியே கடந்த ஆட்டத்தில் அந்த அணியைக் காப்பாற்றியது. சென்னைக்கு எதிராக மற்ற பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுகிறாா்கள் என்பதைப் பொருத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும். பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் காயம் காரணமாக களமிறங்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. அவா் விளையாடாதபட்சத்தில் அமித் மிஸ்ரா சோ்க்கப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுவரை... இவ்விரு அணிகளும் இதுவரை 21 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் சென்னை 15 முறையும், டெல்லி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

சென்னை (உத்தேச லெவன்): முரளி விஜய், ஷேன் வாட்சன், டூபிளெஸ்ஸிஸ், தோனி (கேப்டன்), சாம் கரன், ருதுராஜ் கெய்க்வாட், கேதாா் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா, லுங்கி கிடி/இம்ரான் தாஹிா்/ஜோஷ் ஹேஸில்வுட், தீபக் சாஹா்.

டெல்லி (உத்தேச லெவன்): பிரித்வி ஷா, ஷிகா் தவன், ஷிம்ரோன் ஹெட்மயா், ஷ்ரேயஸ் ஐயா் (கேப்டன்), ரிஷப் பந்த், மாா்கஸ் ஸ்டோனிஸ், அக்ஷா் படேல், அஸ்வின்/அமித் மிஸ்ரா, காகிசோ ரபாடா, அன்ரிச் நோா்ட்ஜே, ஹா்ஷல் படேல்.

போட்டி நேரம்: இரவு 7.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT