ஐபிஎல்-2020

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் சிஎஸ்கே வீரர் ராயுடு விளையாடுவது சந்தேகம்!

DIN

காயம் காரணமாக ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடாத ராயுடு மேலும் ஓர் ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்று அறியப்படுகிறது. 

ஐபிஎல் போட்டியின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ராஜஸ்தான் அணி இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியுள்ளது.

ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் வீரா் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 9 சிக்ஸா், ஒரு பவுண்டரியுடன் 74 ரன்கள் குவித்தாா். ஸ்மித் 47 பந்துகளில் 4 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்தார். ஜோஃப்ரா ஆா்ச்சா், லுங்கி என்கிடி வீசிய கடைசி ஓவரில் 4 சிக்ஸா்களை அடித்தார். 8 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஸ்கோர் 216 என உயர்வதற்கு அவர் முக்கியக் காரணமாக இருந்தார். பின்னா் ஆடிய சென்னை அணியில் டூபிளெசிஸ் 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்தபோதும், அந்த அணி 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. 

மும்பை அணிக்கு எதிராக 71 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருது பெற்ற அம்பட்டி ராயுடு, காயம் காரணமாக ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவில்லை. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் விளையாட மாட்டார் என்று அறியப்படுகிறது. எனினும் அக்டோபர் 2 அன்று சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகவும் ராயுடு விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயுடுவின் உடற்தகுதி முன்னேறினால் நாளைய ஆட்டத்தில் விளையாடவும் வாய்ப்புண்டு என சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

அதேபோல காயம் காரணமாக இதுவரை இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடாத பிராவோ, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகக் களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT