ஐபிஎல்-2020

கிலியில் பந்துவீச்சாளர்கள்: சிக்ஸர்களை வாரி வழங்கும் ஷார்ஜா மைதானம்!

23rd Sep 2020 01:35 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ராஜஸ்தான் அணி இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியுள்ளது.

இந்த ஆட்டத்தில் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன், ஸ்மித், ஆர்ச்சர் ஆகியோர் மட்டும் 17 சிக்ஸர்கள் அடித்தார்கள். இதற்கு முன்பு 2018-ல் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் 33 சிக்ஸர்கள் அடித்ததே ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட ஆட்டமாக இருந்தது. அந்தச் சாதனையை ராஜஸ்தான், சென்னை அணி வீரர்கள் சமன் செய்துள்ளார்கள். 

ராஜஸ்தான் - சென்னை அணி ஆட்டம்: 33 சிக்ஸர்கள்

ADVERTISEMENT

சஞ்சு சாம்சன் - 9 சிக்ஸர்கள்
ஸ்மித் - 4 சிக்ஸர்கள்
ஆர்ச்சர் - 4 சிக்ஸர்கள்
வாட்சன் - 4 சிக்ஸர்கள்
டு பிளெசிஸ் - 7 சிக்ஸர்கள்
சாம் கரண் - 2 சிக்ஸர்கள்
தோனி - 3 சிக்ஸர்கள்

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதற்கு இரு காரணங்கள்.

அபு தாபி, துபை போல அல்லாமல் ஷார்ஜா மைதானம் அளவில் மிகச்சிறியதாக உள்ளது. ஸ்கொயர் பவுண்டரிகளின் நீளம் - 60 மீ தான். பெங்களூர் சின்னசாமி மைதானமும் இதே அளவு சிறிய மைதானமாக இருப்பதால் தான் அங்கும் சிக்ஸர் மழை எப்போதும் பெய்துகொண்டிருக்கும். இதற்கு முன்பு ஐபிஎல் போட்டியில் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதும் அங்குதான். 

இந்த வருடம் இதற்கு முன்பு நடைபெற்ற 3 ஐபிஎல் போட்டிகளிலும் மொத்தமாக 28 சிக்ஸர்கள் மட்டும்தான் அடிக்கப்பட்டன. ஆனால் நேற்று ஒரே நாளில் 33 சிக்ஸர்களை ராஜஸ்தான், சென்னை அணி வீரர்கள் அடித்துள்ளார்கள்.

இன்னொரு காரணம், சிஎஸ்கே சுழற்பந்துவீச்சாளர்கள் மோசமாகப் பந்துவீசியது. ஸ்லாட் பகுதியில் பந்தைத் தூக்கி வீசியதால் மிக எளிதாக சிக்ஸர்களை அடித்தார் சஞ்சு சாம்சன். தனக்கு பியூஷ் சாவ்லா, ஜடேஜா வீசிய 18 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். 

சிஎஸ்கே அணியில் சாவ்லாவின் பந்துவீச்சில் 6 சிக்ஸர்களும் என்கிடி பந்துவீச்சில் 5 சிக்ஸர்களும் ஜடேஜா பந்துவீச்சில் 4 சிக்ஸர்களும் நேற்று அடிக்கப்பட்டன. சஹாரும் கரணும் தலா ஒரு சிக்ஸர் கொடுத்தார்கள். சிறிய மைதானம் என்பதால் சிக்ஸர் மழைக்கு ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களும் தப்பவில்லை. டாம் கரண் 6 சிக்ஸர்களும் டெவாடியா 4 சிக்ஸர்களும் உனாட்கட் 3 சிக்ஸர்களும் ஆர்ச்சர் 2 சிக்ஸர்களும் கோபால் 1 சிக்ஸரும் கொடுத்தார்கள். அதாவது நேற்றைய ஆட்டத்தில் பந்துவீசிய அனைத்து பந்துவீச்சாளர்களும் குறைந்தது 1 சிக்ஸராவது கொடுத்துள்ளார்கள். இதிலிருந்தே ஷார்ஜா மைதானத்தின் சிறிய அளவையும் அதன் பாதிப்பையும் புரிந்துகொள்ளலாம். 

Tags : Sharjah smaller boundaries
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT