ஐபிஎல்-2020

ரோஹித் அதிரடி: கொல்கத்தாவுக்கு 196 ரன்கள் இலக்கு

23rd Sep 2020 09:44 PM

ADVERTISEMENT


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா, மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினார். டி காக் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில், ஷிவோம் மவி பந்தில் ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து, ரோஹித்துடன் இணைந்த சூர்யகுமார் அதிரடியுடன் ஆட்டத்தைத் தொடங்கினார்.

 இந்த இணை அதிரடியாக விளையாடி ரன் ரேட்டை உயர்த்தியது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ், 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

 எனினும், ரோஹித் அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடி வந்தார்.

இவருக்கு ஒத்துழைப்பு தந்து அதிரடி காட்டிய சௌரப் திவாரி 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து சுனில் நரைன் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, 16-வது ஓவரின்போது ஹார்திக் பாண்டியா களமிறங்கினார். அவர் கம்மின்ஸ் வீசிய 17-வது ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து அதிரடிக்கு மாறினார். 

ஆனால் அடுத்த ஓவரிலேயே மவி பந்தில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 54 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, அடுத்த ஓவரிலேயே பாண்டியா 18 ரன்கள் எடுத்த நிலையில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, போலார்ட் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி மட்டும் அடிக்க அது மிகப் பெரிய ஓவராக மாறவில்லை. 

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்துள்ளது. 

கொல்கத்தா அணித் தரப்பில் மவி 2 விக்கெட்டுகளும், நரைன் மற்றும் ரஸல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT