ஐபிஎல்-2020

ஒரே ஆட்டத்தில் 33 சிக்ஸர்கள்: சாதனையை சமன் செய்த ராஜஸ்தான், சென்னை அணி வீரர்கள்!

23rd Sep 2020 11:45 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் ஓர் ஆட்டத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையை ராஜஸ்தான், சென்னை அணி வீரர்கள் சமன் செய்துள்ளார்கள்.

ஐபிஎல் போட்டியின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ராஜஸ்தான் அணி இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியுள்ளது.

ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் வீரா் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 9 சிக்ஸா், ஒரு பவுண்டரியுடன் 74 ரன்கள் குவித்தாா். ஸ்மித் 47 பந்துகளில் 4 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்தார். ஜோஃப்ரா ஆா்ச்சா், லுங்கி என்கிடி வீசிய கடைசி ஓவரில் 4 சிக்ஸா்களை அடித்தார். 8 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஸ்கோர் 216 என உயர்வதற்கு அவர் முக்கியக் காரணமாக இருந்தார். பின்னா் ஆடிய சென்னை அணியில் டூபிளெசிஸ் 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்தபோதும், அந்த அணி 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. 

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன், ஸ்மித், ஆர்ச்சர் ஆகியோர் மட்டும் 17 சிக்ஸர்கள் அடித்தார்கள். இதற்கு முன்பு 2018-ல் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் 33 சிக்ஸர்கள் அடித்ததே ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட ஆட்டமாக இருந்தது. அந்தச் சாதனையை ராஜஸ்தான், சென்னை அணி வீரர்கள் சமன் செய்துள்ளார்கள். 

ராஜஸ்தான் - சென்னை அணி ஆட்டம்: 33 சிக்ஸர்கள்

சஞ்சு சாம்சன் - 9 சிக்ஸர்கள்
ஸ்மித் - 4 சிக்ஸர்கள்
ஆர்ச்சர் - 4 சிக்ஸர்கள்
வாட்சன் - 4 சிக்ஸர்கள்
டு பிளெசிஸ் - 7 சிக்ஸர்கள்
சாம் கரண் - 2 சிக்ஸர்கள்
தோனி - 3 சிக்ஸர்கள்
 

Tags : 33 sixes CSK vs RR
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT