ஐபிஎல்-2020

தோனி அடித்த மெகா சிக்ஸர்: ஸ்டேடியத்தை விட்டு வெளியே சென்ற பந்தை வீட்டுக்கு எடுத்துச் சென்ற ரசிகர்!

23rd Sep 2020 04:13 PM

ADVERTISEMENT

 

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் தோனி சிக்ஸருக்கு அடித்த பந்து, மைதானத்தை விட்டு வெளியேறியது. அந்தப் பந்தை ரசிகர் ஒருவர் திருப்பித் தராமல் எடுத்துச் சென்றுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ராஜஸ்தான் அணி இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியுள்ளது.

ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் வீரா் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 9 சிக்ஸா், ஒரு பவுண்டரியுடன் 74 ரன்கள் குவித்தாா். ஸ்மித் 47 பந்துகளில் 4 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்தார். ஜோஃப்ரா ஆா்ச்சா், லுங்கி என்கிடி வீசிய கடைசி ஓவரில் 4 சிக்ஸா்களை அடித்தார். 8 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஸ்கோர் 216 என உயர்வதற்கு அவர் முக்கியக் காரணமாக இருந்தார். பின்னா் ஆடிய சென்னை அணியில் டூபிளெசிஸ் 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்தபோதும், அந்த அணி 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. 

ADVERTISEMENT

இந்த ஆட்டத்தில் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன், ஸ்மித், ஆர்ச்சர் ஆகியோர் மட்டும் 17 சிக்ஸர்கள் அடித்தார்கள். இதற்கு முன்பு 2018-ல் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் 33 சிக்ஸர்கள் அடித்ததே ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட ஆட்டமாக இருந்தது. அந்தச் சாதனையை ராஜஸ்தான், சென்னை அணி வீரர்கள் சமன் செய்துள்ளார்கள். 

19-வது ஓவர் வரை 12 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார் தோனி. இந்த நிதான ஆட்டத்தைக் கண்டு பலரும் குழம்பினார்கள். கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றி பெற 38 ரன்கள் தேவை என்கிற நிலை இருந்தபோது தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் அடித்தார் தோனி. 

டாம் கரண் பந்துவீச்சில் தோனி அடித்த இரு சிக்ஸர்கள், மைதானத்தை விட்டு வெளியே சென்றன. தோனி சிக்ஸருக்கு அடித்த ஒரு பந்து மைதானத்துக்கு வெளியே, சாலையின் மறுபக்கத்துக்கு உருண்டோடியது. அந்தப் பந்தை ரசிகர் ஒருவர் புன்னகையுடன் எடுத்துச் சென்றது தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. அந்தப் பந்தை அவர் திருப்பித் தராமல் எடுத்துச் சென்றுவிட்டார். இதைக் கண்டு தொலைக்காட்சியில் வர்ணனையாளர் இவ்வாறு கூறினார்: அந்தப் பந்தை அவர் திருப்பித் தர மாட்டார். அதைப் பரிசாக எண்ணி வாழ்நாள் முழுவதும் பாதுகாத்துக் கொள்வார் என்றார்.

Tags : MS Dhoni Sharjah stadium
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT