ஐபிஎல்-2020

வெற்றியை மறந்துவிட்டு நெட் ரன் ரேட்டுக்காக விளையாடினாரா தோனி?

23rd Sep 2020 03:30 PM

ADVERTISEMENT

 

ராஜஸ்தான் அணிக்கு எதிராக நிதானமாக விளையாடிய தோனியை முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்.

ஐபிஎல் போட்டியின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ராஜஸ்தான் அணி இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியுள்ளது.

தோனி களமிறங்கியபோது வெற்றி பெற தேவையான ரன் ரேட் - 16.26 ஆக இருந்தது. அதாவது 38 பந்துகளுக்கு 103 ரன்கள்!

ADVERTISEMENT

19-வது ஓவர் வரை 12 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார் தோனி. இந்த நிதான ஆட்டத்தைக் கண்டு பலரும் குழம்பினார்கள். கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றி பெற 38 ரன்கள் தேவை என்கிற நிலை இருந்தபோது தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் அடித்தார் தோனி. 

தோனியும் டு பிளெசிஸும் 31 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார்கள். 19 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார் டு பிளெசிஸ். ஆனால் அந்தக் கூட்டணியில் 12 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் தோனி. டு பிளெசிஸும் முதலில் 18 பந்துகளில் 17 ரன்கள் தான் எடுத்திருந்தார்.

நல்ல தொடக்கம் அமைந்திருந்தால் இலக்கை விரட்ட முயற்சி செய்திருக்கலாம் என்று ஆட்டம் முடிந்தபிறகு தோனி பேட்டியளித்தார். அவர் மேலும் கூறியதாவது:

நீண்ட நாள்களாக நான் விளையாடவில்லை. 14 நாள் தனிமைப்படுத்துதலும் இதற்கு உதவவில்லை. இந்தப் போட்டியில் நிதானமாகவே விளையாட ஆரம்பித்துள்ளேன். மேலும் சில வித்தியாசமான உத்திகளையும் கடைப்பிடிக்க எண்ணுகிறோம். அதனால் தான் சாம் கரண், ஜடேஜாவை நடுநிலை வீரர்களாகக் களமிறக்கினோம். இதுபோன்று உத்திகளை நாங்கள் மேற்கொண்டு பல வருடங்களாகிவிட்டது. போட்டியின் ஆரம்பத்தில் இதனை முயற்சி செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. போட்டியின் பிற்பகுதியில் மூத்த வீரர்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள். மற்றபடி ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும் அணியாகவே நாங்கள் உள்ளோம். இப்போது புதிய முயற்சிகளைச் செய்து பார்ப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கருதினேன். இது பலன் அளிக்காவிட்டால் எங்களுடைய பழைய உத்திகளை மீண்டும் கடைப்பிடிப்போம் என்றார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணி வெற்றி பெறுவதற்காக விளையாடாமல் நெட் ரன் ரேட்டை அதிகப்படுத்துவதற்காக விளையாடியதாகப் பலரும் குற்றம் சாட்டியுள்ளார்கள். 

கிரின்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கூறியதாவது:

தோனி 7-ம் நிலை வீரராகக் களமிறங்கியது உண்மையிலேயே எனக்கு ஆச்சர்யம் அளித்தது. தனக்கு முன்னாள் சாம் கரண், கெயிக்வாட் ஆகியோரைக் களமிறக்கியது அர்த்தமே இல்லாதது போல எனக்குத் தோன்றியது. நீங்கள் தான் முன்நின்று இலக்கை விரட்டுவதில் வழிநடத்த வேண்டும். முன்நின்று வழிநடத்துவது என்று இதைச் சொல்லமாட்டார்கள். 217 இலக்கை 7-ம் நிலை வீரராகக் களமிறங்கி அடையப் போகிறீர்களா? ஆட்டம் அப்போதே முடிந்துவிட்டது. டுபிளெசிஸ் மட்டுமே வெற்றிக்காகப் போராடினார். தோனி கடைசி ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடித்ததைச் சொல்லலாம். அதனால் பயன் எதுவுமில்லை. தனிப்பட்ட நலனுக்காக அடிக்கப்பட்ட ரன்கள். வேறொருவர் இதைச் செய்திருந்தால், வேறொரு கேப்டன் 7-ம் நிலை வீரராகக் களமிறங்கியதால் கடும் விமர்சனங்களை அவர் எதிர்கொண்டிருப்பார். 

தோனி என்பதால் யாரும் இதைப் பற்றி பேசமாட்டார்கள். சுரேஷ் ரெய்னா இல்லாதபோது சாம் கரண் உங்களை விட சிறந்த வீரர் என நம்பவைக்கிறீர்கள். கெயிக்வாட், கரண், ஜாதவ், டு பிளெசிஸ், விஜய் ஆகியோர் உங்களை விட சிறந்தவர்கள் எனவும் நம்ப வைக்கிறீர்கள் என்றார்.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியதாவது:

விளையாட ஒப்பந்தம் செய்துகொண்டால் எந்தவொரு சூழலை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கவேண்டும். சாக்குப்போக்குகள் சொல்லக்கூடாது என்று தோனியின் பெயரைக் குறிப்பிட்டாமல் ட்வீட் செய்துள்ளார்.  

Tags : dhoni Gambhir
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT