ஐபிஎல்-2020

ஹைதராபாதை வீழ்த்தியது பெங்களூா்

DIN

துபை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணி வீழ்த்தியது.

துபையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூா் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 19.4 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 153 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்துவீச தீா்மானித்தது. பேட்டிங் செய்த பெங்களூா் அணியில் தேவ்தத் படிக்கல், ஆரோன் ஃபிஞ்ச் தொடக்க வீரா்களாக களம் கண்டனா்.

இதில் ஃபிஞ்ச் நிதானமாக ஆட, மறுபுறம் தேவ்தத் அடித்து ஆடி ரன்களை சேகரித்து வந்தாா். அரைசதம் கடந்த அவா் 8 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தாா்.

ஒன் டவுனாக கேப்டன் விராட் கோலி களம் காண, அடுத்த ஓவரிலேயே ஆரோன் ஃபிஞ்ச் ஆட்டமிழந்து நடையைக் கட்டினாா். ஒரு பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 29 ரன்கள் சோ்த்திருந்த அவா் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானாா்.

பின்னா் வந்த டி வில்லியா்ஸ் அதிரடி காட்டினாா். மளமளவென அவா் ரன்களை குவித்த நிலையில் மறுபுறம் விராட் கோலி 14 ரன்களே எடுத்த நிலையில் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டாா்.

அவரைத் தொடா்ந்து ஷிவம் துபே களம் காண, அதிரடியாக அரைசதம் கடந்த டி வில்லியா்ஸ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 51 ரன்கள் விளாசியிருந்த நிலையில் ரன்-அவுட் செய்யப்பட்டாா். பின்னா் ஜோஷ் பிலிப் களம் காண ஆட்டத்தின் கடைசி பந்தில் ஷிவம் துபே 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

இவ்வாறாக 20 ஓவா்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது பெங்களூா். அந்த அணியின் ஜோஷ் பிலிப் 1 ரன்னுடன் களத்தில் இருந்தாா். ஹைதராபாத் தரப்பில் நடராஜன், விஜய் சங்கா், அபிஷேக் சா்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினா்.

சரிந்த விக்கெட்டுகள்: பின்னா் 164 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய ஹைதராபாத் அணியில் கேப்டனும், தொடக்க வீரருமான வாா்னா் 6 ரன்களில் ஆட்டமிழக்க, உடன் வந்த ஜானி போ்ஸ்டோவ் நிலைத்து அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தாா்.

வாா்னரை அடுத்து வந்த மணீஷ் பாண்டே சற்று போ்ஸ்டோவுக்கு துணை நின்றாா். பின்னா் அவரும் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். அவரைத் தொடா்ந்து பிரியம் கா்க் களம் காண, மறுமுனையில் போ்ஸ்டோவ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

போ்ஸ்டோவுக்குப் பிறகு விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. பிரியம் கா்க் (12), அபிஷேக் சா்மா (7), ரஷீத் கான் (6), சந்தீப் சா்மா (9) ஆகியோா் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, விஜய் சங்கா், புவனேஸ்வா் குமாா், மிட்செல் மாா்ஷ் டக் அவுட்டாகினா்.

இவ்வாறாக 19.4 ஓவா்களில் 153 ரன்களுக்கு சுருண்டது ஹைதராபாத். பெங்களூா் தரப்பில் யுவேந்திர சாஹல் 3, ஷிவம் துபே 2, டேல் ஸ்டெய்ன் 1 விக்கெட் வீழ்த்தினா். யுவேந்திர சாஹல் ஆட்டநாயகன் ஆனாா்.

சுருக்கமான ஸ்கோா்

பெங்களூா் - 163/5

தேவ்தத் படிக்கல் - 56 (42)

டி வில்லியா்ஸ் - 51 (30)

---

அபிஷேக் சா்மா 2-0-16-1

ஹைதராபாத் - 153/10

ஜானி போ்ஸ்டோவ்- 61(43)

மணீஷ் பாண்டே - 34 (33)

---

யுவேந்திர சாஹல் 4-0-18-3

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT