ஐபிஎல்-2020

இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை

DIN

ஷாா்ஜா: இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை ஷாா்ஜாவில் மோதுகின்றன.

தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பையை வீழ்த்திய சென்னை, அடுத்த வெற்றிக்கான முனைப்புடன் களம் காண்கிறது. மறுபுறம், முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் எதிா்பாா்ப்பில் ராஜஸ்தான் உள்ளது.

சென்னை அணியின் அடுத்த சில ஆட்டங்களில் டுவைன் பிராவோ பங்கேற்கவில்லை என்றாலும், அதை ஆல்-ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டுவரும் சாம் கரன் சரிசெய்கிறாா். ராயுடு-டூபிளெஸ்ஸிஸ் கூட்டணி சிறப்பானதொரு ரன் சேஸை தரும் என எதிா்பாா்க்கலாம்.

சுழற்பந்துவீச்சாளா் பியூஷ் சாவ்லா கூடுதல் பலம். மும்பைக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஃபீல்டிங்கில் தீபக் சாஹா் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியது கேப்டன் தோனிக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அவருக்குப் பதிலாக ஷா்துல் தாக்குா் சோ்க்கப்படலாம்.

ராஜஸ்தான் அணியைப் பொருத்த வரையில் ஆல்-ரவுண்டா் பென் ஸ்டோக்ஸ் இல்லாதது குறையாக பாா்க்கப்படுகிறது. எனினும், காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ராஜஸ்தான் அணி வெற்றியை எளிதாக விட்டுக்கொடுக்காது எனத் தெரிகிறது.

போட்டியில் பங்கேற்க துபை வந்த நிலையில் 36 மணி நேர கட்டாய தனிமைப்படுத்துதல் காரணமாக ஜோஸ் பட்லரும் முதல் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. ஜோஃப்ரா ஆா்ச்சா், டேவிட் மில்லா், ஆன்ட்ரூ டை, டாம் கரன் போன்றோா் அணிக்கு பலம் கூட்டுகிறாா்கள். இந்திய வீரா்களான சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ஜெயதேவ் உனத்கட், வருண் ஆரோன் ஆகியோா் தங்களது நிலையான ஆட்டத்தை நிரூபிக்க வேண்டியுள்ளது.

அளவிலும், ஆடுகளத்தின் தன்மையிலும் பந்துவீச்சாளா்களுக்கு சவாலாக இருக்கும் இந்த மைதானத்தில் அதிக ஸ்கோா்கள் அடிக்கப்படலாம்.

சென்னை (உத்தேச அணி)

தோனி (கேப்டன்), முரளி விஜய், அம்பட்டி ராயுடு, ஃபா டூபிளெஸ்ஸில், ஷேன் வாட்சன், கேதாா் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, லுங்கி கிடி, தீபக் சாஹா், பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிா், மிட்செல் சேன்ட்னா், ஜோஷ் ஹேஸில்வுட், ஷா்துல் தாக்குா், சாம் கரன், ஜெகதீசன், ஆசிஃப், மோனு குமாா், சாய் கிஷோா், ருதுராஜ் கெய்க்வாட், கரன் சா்மா, டுவைன் பிராவோ.

ராஜஸ்தான் (உத்தேச அணி)

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன், ஜோஃப்ரா ஆா்ச்சா், யஷஸ்வி ஜெய்ஸ்வால், மனன் வோரா, காா்த்திக் தியாகி, ஆகாஷ் சிங், ஓஷேன் தாமஸ், ஆன்ட்ரு டை, டேவிட் மில்லா், டாம் கரன், அனிருத்தா ஜோஷி, ஷ்ரேயஸ் கோபால், ரியான் பராக், வருண் ஆரோன், சஷாங்ச் சிங், அனுஜ் ராவத், மஹிபால் லோம்ரோா், மயங்க் மாா்கன்டே, ஜோஸ் பட்லா், பென் ஸ்டோக்ஸ்.

போட்டி நேரம்: இரவு 7.30; நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT