ஐபிஎல்-2020

காயத்தால் வெளியேறிய அஸ்வின் நிலைமை தற்போது எப்படி உள்ளது?

DIN

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் காயம் காரணமாக வெளியேறிய அஸ்வின் நிலைமை பற்றி தில்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறியுள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் சூப்பா் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது தில்லி கேபிடல்ஸ். ரபாடாவின் அற்புதமான பந்துவீச்சால் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

முதலில் பேட் செய்த தில்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. பின்னா், ஆடிய பஞ்சாப் அணியும் 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சோ்க்க ஆட்டம் டையானது. இதையடுத்து, நடைபெற்ற சூப்பா் ஓவரில் தில்லி அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து வெற்றியைத் தீா்மானிக்க சூப்பா் ஓவரில் இரு அணிகளும் விளையாடின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த ராகுல், ரபாடா வீசிய அடுத்த பந்தில் ஆட்டமிழந்தாா். அவரைத் தொடா்ந்து பூரண் ஆட்டமிழந்தாா். இதையடுத்து 3 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த தில்லி அணி 3 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. சூப்பா் ஓவரில் இதுதான் மிகக்குறைவான இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஒரு ஓவர் மட்டும் வீசிய தில்லி வீரர் அஸ்வின், 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். எனினும் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஃபீல்டிங் செய்ய முயன்றபோது கீழே விழுந்தார். இதனால் அவருக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். பிறகு அவர் மீண்டும் விளையாட வரவில்லை.

அஸ்வின் நிலைமை பற்றி தில்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறியதாவது:

அஸ்வின் ஓவரால் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியது. அடுத்த ஆட்டத்துக்குத் தயாராகிவிடுவேன் என அஸ்வின் கூறியுள்ளார். ஆனால் அதைப் பற்றி அணியின் பிசியோ தான் முடிவு செய்வார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

SCROLL FOR NEXT