ஐபிஎல்-2020

டெல்லி-பஞ்சாப் இன்று மோதல்

DIN

துபை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
துபையில் ஞாயிற்றுக்கிழமை (செப். 20) நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று தொடரை வெற்றியோடு தொடங்க இரு அணிகளுமே தீவிரம் காட்டும் என்பதால், விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுமே சமபலம் கொண்டவையாக உள்ளன. டெல்லி அணியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ள அதேவேளையில், பஞ்சாப் அணியில் உலகின் தலைசிறந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லி அணியின் பேட்டிங்கைப் பொருத்தவரையில் ஷிகர் தவன், பிரித்வி ஷா,கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹெட்மயர், அலெக்ஸ் கேரி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். வேகப்பந்துவீச்சில் இஷாந்த் சர்மா, காகிசோ ரபாடா, கீமோ பால் ஆகியோரை நம்பியுள்ளது டெல்லி. சுழற்பந்துவீச்சில் அஸ்வின், அக்ஷர் படேல், சந்தீப் லேமிச்சேன் ஆகியோர் டெல்லி அணிக்கு பலம் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிரட்டும் மேக்ஸ்வெல்: பஞ்சாப் அணியில் கேப்டன் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் சர்ஃப்ராஸ் கான், நிகோலஸ் பூரண், மேக்ஸ்வெல், மன்தீப் சிங் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அதிரடியாக ரன் குவித்து தொடர்நாயகன் விருதை வென்ற கையோடு ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் மேக்ஸ்வெல், பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேகப்பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டான், முகமது சமி ஆகியோரையும், சுழற்பந்துவீச்சில் கிருஷ்ணப்பா கெளதம், முஜீப் அர் ரஹ்மான், ரவி பிஷ்னோய் ஆகியோரையும் நம்பியுள்ளது பஞ்சாப்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இறுதிச்சுற்றுக்கு முன்னேறாத ஒரே அணியான டெல்லி அணி, இந்த முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதில் தீவிரமாக உள்ளது.
இதுவரை... ஐபிஎல் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பஞ்சாப் 14 முறையும், டெல்லி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் 4-இல் பஞ்சாப் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில் கடந்த சீசனில் கடைசியாக மோதிய ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி (உத்தேச அணி) 

ஷிகர் தவன், பிரித்வி ஷா, ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பந்த், ஷிம்ரோன் ஹெட்மயர், அலெக்ஸ் கேரி, அக்ஷர் படேல்/அமித் மிஸ்ரா, ஆர்.அஸ்வின், காகிசோ ரபாடா, இஷாந்த் சர்மா, சந்தீப் லேமிச்சேன், கீமோ பால்.

பஞ்சாப் (உத்தேச அணி)

கே.எல்.ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், சர்ஃப்ராஸ் கான், நிகோலஸ் பூரண், மேக்ஸ்வெல், மன்தீப் சிங், கிறிஸ் ஜோர்டான்/ஷெல்டான் காட்ரெல், கிருஷ்ணப்பா கெளதம், முஜீப் அர் ரஹ்மான், ரவி பிஷ்னோய், முகமது சமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் பலி

தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

புதுகையில் ஆட்சியரகம் முன்பு கருகிய நெற்பயிா்களைக் கொட்டி போராட்டம்

திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

கந்தா்வகோட்டை பள்ளியில் நலக் கல்வி மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT