ஐபிஎல்-2020

ஐபில் போட்டியில் விளையாடும் தமிழக வீரர்களும் அவர்களுடைய சம்பளமும்

19th Sep 2020 11:05 AM

ADVERTISEMENT

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

கடந்த வருட இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 338 வீரர்கள் கலந்துகொண்டார்கள். 73 வீரர்களைத் தேர்வு செய்யலாம் என்கிற நிலைமையில் 8 அணிகளும் சேர்ந்து 62 வீரர்களை மட்டுமே தேர்வு செய்தன. எனினும் அனைத்து அணிகளும் தங்களுக்கான 8 வெளிநாட்டு வீரர்களை ஏலம் வழியாகத் தேர்வு செய்து கொண்டன. யூசுப் பதான், விஹாரி போன்ற இந்திய அணிக்காக விளையாடிய, விளையாடும் வீரர்கள் சிலர் எந்த அணிக்கும் தேர்வாகாமல் ஏமாற்றம் அடைந்தார்கள். 

இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் 10 தமிழக வீரர்கள் பங்கேற்றார்கள். அவர்களில் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். 

ADVERTISEMENT

2019 ஐபிஎல் போட்டியில் 9 தமிழக வீரர்கள் பங்கேற்றார்கள். இவர்களில் வருண் சக்கரவர்த்தி மட்டும் பஞ்சாப் அணியால் விடுவிக்கப்பட்டார். பிறகு ஏலத்தில் சக்கரவர்த்தியை ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்து ஆச்சர்யப்படுத்தியது கொல்கத்தா அணி.  

ஏலத்தில் தேர்வான தமிழக வீரர்கள்

1. வருண் சக்கரவர்த்தி - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - ரூ. 4 கோடி 
2. சாய் கிஷோர் - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ. 20 லட்சம்
3. எம் சித்தார்த் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - ரூ. 20 லட்சம்

2020 ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள தமிழக வீரர்கள்

1. ஆர். அஸ்வின் - தில்லி - ரூ. 7.60 கோடி
2. தினேஷ் கார்த்திக் - கொல்கத்தா - ரூ. 7.40 கோடி
3. விஜய் சங்கர் - ஹைதராபாத் - ரூ. 3.20 கோடி
4. வாஷிங்டன் சுந்தர் - பெங்களூர் - ரூ. 3.20 கோடி
5. முரளி விஜய் - சென்னை - ரூ. 2 கோடி
6. நடராஜன் - ஹைதராபாத் - ரூ. 40 லட்சம்
7. ஜெகதீசன் - சென்னை - ரூ. 20 லட்சம்
8. எம். அஸ்வின் - பஞ்சாப் - ரூ. 20 லட்சம்

9. வருண் சக்கரவர்த்தி - கொல்கத்தா - ரூ. 4 கோடி

10. சாய் கிஷோர் - சென்னை - ரூ. 20 லட்சம்

11. எம் சித்தார்த் - கொல்கத்தா - ரூ. 20 லட்சம்

ஐபிஎல் 2020 ஏலத்தில் பங்குபெற்ற 10 தமிழக வீரர்கள்

1. வருண் சக்கரவர்த்தி - ரூ. 30 லட்சம் (அடிப்படை விலை)
2. ஷாருக் கான் - ரூ. 20 லட்சம்
3. சாய் கிஷோர் - ரூ. 20 லட்சம்
4. எம். சித்தார்த் - ரூ. 20 லட்சம் 
5. ஹரி நிஷாந்த் - ரூ. 20 லட்சம்
6. பெரியசாமி - ரூ. 20 லட்சம் 
7. மணிகண்டன் - ரூ. 20 லட்சம்
8. பாபா அபராஜித் - ரூ. 20 லட்சம் 
9. முகமது - ரூ. 20 லட்சம் 
10. அபினவ் - ரூ. 20 லட்சம்

ஏலத்தில் பங்கேற்ற 10 தமிழக வீரர்களில் ஷாருக்கான், ஹரி நிஷாந்த், பெரியசாமி, மணிகண்டன், பாபா அபராஜித், முகமது, அபினவ் ஆகிய 7 தமிழக வீரர்களை எந்த அணியும் தேர்வு செய்யாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.

 

Tags : IPL Tamil Nadu cricketers
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT