ஐபிஎல்-2020

சிஎஸ்கே அணிக்குத் தொடர்ந்து நெருக்கடி தரும் மும்பை அணி!

19th Sep 2020 02:37 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதும் ஆட்டத்தை அனைவரும் மிகவும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக சென்னை அணியைத் தொடர்ந்து தோற்கடித்து வருகிறது மும்பை அணி.

2013 பாதியில் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா, அந்த வருடமே ஐபிஎல் கோப்பையைத் தட்டிச் சென்றார். அதன்பிறகு 2015, 2017, 2019 ஆண்டுகளில் அந்த அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

சென்னை, மும்பை ஆகிய இரு அணிகளும் இதுவரை 28 ஐபிஎல் ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் 17 ஆட்டங்களில் மும்பையும் சிஎஸ்கே 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

ADVERTISEMENT

2015க்குப் பிறகு நிலைமை மிகவும் மாறிவிட்டது. இரு அணிகளும் விளையாடிய 10 ஆட்டங்களில் மும்பை 8 ஆட்டங்களிலும் 2 ஆட்டங்களில் சென்னையும் வெற்றி பெற்றுள்ளன. அதிலும் இரு அணிகளும் மோதிய கடைசி 5 ஆட்டங்களில் மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தையும் மும்பை அணி வெல்லும் என்றே ஐபிஎல் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சென்னை - மும்பை: 2008 முதல் 2019 வரை

மும்பை வெற்றி - 17
சென்னை வெற்றி - 11

சென்னை - மும்பை: 2015 முதல் 2019 வரை

மும்பை வெற்றி - 8
சென்னை வெற்றி - 2

சென்னை - மும்பை: கடைசி 5 ஆட்டங்களில்

மும்பை வெற்றி - 5
சென்னை வெற்றி - 0

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT