ஐபிஎல்-2020

ஐபிஎல் கோப்பையை இந்த அணி வெல்ல வேண்டும்: கெவின் பீட்டர்சன் விருப்பம்

18th Sep 2020 05:08 PM

ADVERTISEMENT

 

இந்த வருட ஐபிஎல் போட்டியை தில்லி கேபிடல்ஸ் அணி வெல்லவேண்டும் என முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விருப்பம் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

ஐபிஎல் போட்டிக்காக துபை, அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டி பற்றி இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறியதாவது:

இந்த வருட ஐபிஎல் போட்டி வித்தியாசமானதாக இருக்கும். ரசிகர்கள் கிடையாது. எல்லோரும் பாதுகாப்பு வளையத்துக்குள் தான் இருக்கவேண்டும். இச்சூழலைச் சமாளிக்கும் அணியே ஐபிஎல் போட்டியை வெல்லும். 

தில்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் போட்டியை வெல்லவேண்டும் என விரும்புகிறேன். ஏனெனில் அந்த அணி எனக்கு மிகவும் பிடித்தமானது. எனினும் எந்த அணி வெல்லும் என என்னால் கணிக்க முடியாது. அதற்கு போட்டி தொடங்கி இரு வாரங்களாவது ஆன பிறகுதான் சொல்ல முடியும். 

ஐபிஎல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தியா எனக்கு வழங்கிய அனைத்தும் பிடிக்கும். இந்தியக் கலாசாரம். நட்பு என அனைத்தையும் நான் அனுபவித்துள்ளேன். வணிக ரீதியாகவும் நான் பலனடைந்துள்ளேன். உணர்வுபூர்வமான பந்தம் இந்தியாவிடம் எனக்கு உண்டு. இந்தியாவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றார்.     

ADVERTISEMENT
ADVERTISEMENT