ஐபிஎல்-2020

120 ரன்களுக்குக் கட்டுப்பட்டது ஆர்சிபி

31st Oct 2020 09:09 PM

ADVERTISEMENT


சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.

13-வது ஐபிஎல் சீசனின் 52-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பெங்களூருவில் தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் ஜோஷ் பிலிப்பி களமிறங்கினர். ஆடுகளம் சற்று மெதுவாக இருந்ததால் ரன் குவிப்பதில் சிரமம் இருந்தது. இதனால், சந்தீப் சர்மா ஓவரில் படிக்கல் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 7 ரன்களுக்கு சந்தீப் சர்மாவிடம் 7-வது முறையாக ஆட்டமிழந்தார்.  இதையடுத்து, பிலிப்பியுடன் இணைந்த டி வில்லியர்ஸ் இணைந்தார். பிலிப்பி ரன் குவித்து வந்தாலும், டி வில்லியர்ஸ் ரன் குவிக்க சிரமப்பட்டார். இதன்பிறகு, அவரும் ஆடுகளத்துக்கு ஏற்ப ரன் குவிக்கத் தொடங்கினார். ஆனால், ஷபாஸ் நதீம் சுழலில் டி வில்லியர்ஸ் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே பிலிப்பியும் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, வாஷிங்டன் சுந்தர் மற்றும் குர்கீரத் சிறிய பாட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்த பாட்னர்ஷிப் கடைசி கட்டத்தில் அதிரடியாக மாற வேண்டிய நேரத்தில் சுந்தர் 21 ரன்களுக்கு நட்ராஜனிடம் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மாரிஸ் (3), உடானா (0) ஹோல்டர் வீசிய 19-வது ஓவரில் ஆட்டமிழந்தனர்.

ADVERTISEMENT

நட்ராஜன் வீசிய கடைசி ஓவரிலும் பவுண்டரிகள் கிடைக்கவில்லை. இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது.

ஹைதராபாத் தரப்பில் சந்தீப் சர்மா, ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், நட்ராஜன், நதீம், ரஷித் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Tags : IPL
ADVERTISEMENT
ADVERTISEMENT