ஐபிஎல்-2020

ஐபிஎல்: பஞ்சாப்பை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலைக் கலைத்துப் போட்ட ராஜஸ்தான் அணி!

31st Oct 2020 10:27 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது.

முன்னதாக முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. 63 பந்துகளில் 8 சிக்ஸா், 6 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் குவித்தாா் கெயில். பின்னா் ஆடிய ராஜஸ்தான் 17.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. பென் ஸ்டோக்ஸ் 26 பந்துகளில் 3 சிக்ஸா், 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தாா். மற்றொரு தொடக்க வீரரான ராபின் உத்தப்பா 23 பந்துகளில் 2 சிக்ஸா், ஒரு பவுண்டரியுடன் 30, சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 3 சிக்ஸா், 4 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, அந்த அணியின் வெற்றி எளிதானது. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 20 பந்துகளில் 31, ஜோஸ் பட்லா் 11 பந்துகளில் 22 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இதன்மூலம் 6-ஆவது வெற்றியைப் பெற்ற ராஜஸ்தான் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிளேஆஃப் கனவில் இருக்கும் கொல்கத்தா 6-ம் இடத்துக்கு இறங்கிவிட்டது. 4-ம் இடத்தில் இருந்தாலும் பஞ்சாப் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு குறைந்துள்ளது.

ADVERTISEMENT

புள்ளிகள் பட்டியல்

 வரிசை   அணிகள்  ஆட்டங்கள்   வெற்றி   தோல்வி   புள்ளிகள்   நெட்   ரன்ரேட் 
 1.  மும்பை  12  8  4  16  +1.186
 2.  பெங்களூர்  12  7  5  14  +0.048
 3.  தில்லி  12  7  5  14  +0.030
 4.  பஞ்சாப்  13  6  7  12  -0.133
 5.  ராஜஸ்தான்  13  6  7  12  -0.377
 6.  கொல்கத்தா   13  6  7  12  -0.467
 7.  ஹைதராபாத்   12  5  7  10  +0.396
 8.  சென்னை  13  5  8  10  -0.602
ADVERTISEMENT
ADVERTISEMENT