ஐபிஎல்-2020

ஐபிஎல் பார்வையாளர்கள் எண்ணிக்கை 28% அதிகரிப்பு

31st Oct 2020 03:41 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியின் பார்வையாளர்கள் எண்ணிக்கை இந்த வருடம் 28% உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10 அன்று நிறைவுபெறுகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஐபிஎல் போட்டியின் தொலைக்காட்சி ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 21 சேனல்களில் முதல் 41 ஆட்டங்களுக்கு 700 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. கடந்த வருடம் 24 சேனல்களில் முதல் 44 ஆட்டங்களுக்கு 550 கோடி பார்வைகள் கிடைத்தன. இதையடுத்து இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான பார்வையாளர்கள் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளதாக பார்க் நிறுவனம் அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT

ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்கள் நிறைவுப்பகுதியை அடைந்துள்ளன. நம்பர் 3 வரை நடைபெறவுள்ள லீக் ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இதுவரை பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது. நவம்பர் 5 முதல் பிளேஆஃப் சுற்று தொடங்குகிறது. இறுதிச்சுற்று ஆட்டம் நவம்பர் 10 அன்று நடைபெறுகிறது.

Tags : IPL viewership IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT