ஐபிஎல்-2020

மூன்று இடங்களுக்கு ஆறு அணிகள் போட்டி: ஐபிஎல் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற என்ன செய்யவேண்டும்?

DIN


ஐபிஎல் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் நடைபெறவுள்ள நான்கு ஆட்டங்கள் பல முக்கிய முடிவுகளைத் தரவுள்ளன. 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10 அன்று நிறைவுபெறுகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்கள் நிறைவுப்பகுதியை அடைந்துள்ளன. நம்பர் 3 வரை நடைபெறவுள்ள லீக் ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே இதுவரை பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது. நவம்பர் 5 முதல் பிளேஆஃப் சுற்று தொடங்குகிறது. இறுதிச்சுற்று ஆட்டம் நவம்பர் 10 அன்று நடைபெறுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது. இதன்மூலம் 6-ஆவது வெற்றியைப் பெற்ற ராஜஸ்தான் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிளேஆஃப் கனவில் இருக்கும் கொல்கத்தா 6-ம் இடத்துக்கு இறங்கிவிட்டது. 4-ம் இடத்தில் இருந்தாலும் பஞ்சாப் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு குறைந்துள்ளது.

புள்ளிகள் பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ள மும்பை அணி, பிளேஆஃப்புக்குத் தகுதியடைந்துள்ளது. மேலும் முதல் இரு இடங்களில் ஓர் இடமும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அதேபோல பிளேஆஃப் போட்டியில் சென்னை அணியும் இல்லை. பிளேஆஃப் சுற்றுக்கான மீதமுள்ள 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டியிடுகின்றன. அந்த அணிகள் என்ன செய்தால் பிளேஆஃப்புக்குச் செல்ல முடியும்?

தில்லி கேபிடஸ்

12 ஆட்டங்களில் 14 புள்ளிகளைக் கொண்டுள்ளது.

அடுத்த இரு ஆட்டங்களில் ஒன்றை வென்றால் போதும், பிளேஆஃப்புக்குத் தகுதியடைந்து விடலாம். இரண்டிலும் தோற்றால் கஷ்டம் தான். நெட் ரன்ரேட் அடிப்படையில் மற்ற அணிகள் தில்லியைத் தாண்டிச் சென்றுவிடும். 

ராயல் சேலஞர்ஸ் பெங்களூர்

12 ஆட்டங்களில் விளையாடி 14 புள்ளிகளைக் கொண்டுள்ளது.

மீதமுள்ள இரு ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் வென்றாலும் பெங்களூர் அணி பிளேஆஃப்புக்குச் சென்றுவிடும். இரு ஆட்டங்களில் தோற்றாலும் 14 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட் அடிப்படையில் முன்னேற முடியும். அல்லது இரு ஆட்டங்களிலும் தோற்றுப்போனால் நெட் ரன்ரேட் மோசமாகி அதனால் வெளியேறவும் வாய்ப்புண்டு. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

13 ஆட்டங்களில் விளையாடி 12 புள்ளிகளைக் கொண்டுள்ளது.

நாளைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் வென்றாலும் பிளேஆஃப் உறுதியாகாது. சன்ரைசர்ஸ் அணி தனது அடுத்த இரு ஆட்டங்களையும் வென்றாலோ அல்லது தில்லி - பெங்களூர் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் தோல்வி பெறும் அணி புள்ளிகளினாலோ அல்லது அதிக நெட் ரன்ரேட்டினாலோ புள்ளிகள் பட்டியலில் மேலே இருந்தாலும் பஞ்சாப் அணி போட்டியிலிருந்து வெளியேறிவிடும். 

சன்ரைசர்ஸ் அணி இரண்டில் ஒன்று தோல்வியடைந்தாலும் 14 புள்ளிகளுடன் பிளேஆஃப் செல்ல பஞ்சாப்புக்கு வாய்ப்புள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

12 ஆட்டங்களில் விளையாடி 10 புள்ளிகளைக் கொண்டுள்ளது.

நேற்று பஞ்சாப் தோற்றதால் மகிழ்ச்சியடைந்த அணி. அடுத்த இரு ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் வென்றால் பிளேஆஃப்புக்குச் சென்றுவிடலாம். ஏனெனில் மூன்று அணிகளால் மட்டுமே 16 புள்ளிகளைப் பெற முடியும். 14 புள்ளிகள் கொண்டுள்ள அணிகள் எதனாலும் சன்ரைசர்ஸ் அணியின் நெட் ரன்ரேட்டைத் தொட முடியாது. 

ஆனால் அடுத்த இரு ஆட்டங்களில் ஒன்றில் தோற்றுப்போனாலும் கதை முடிந்தது. கடந்த முறை 12 புள்ளிகளுடன் பிளேஆஃப்புக்குச் சென்றதுபோல இந்தமுறை முடியாது. 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

13 ஆட்டங்களில் 12 புள்ளிகளைக் கொண்டுள்ளது.

நெட் ரன்ரேட் மோசமாக உள்ளதால் அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தா வென்று, மற்ற அணிகள் 14 புள்ளிகள் பக்கம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

அது எப்படிச் சாத்தியமாகும்?

கடைசி ஆட்டத்தில் சென்னையுடன் பஞ்சாப் தோற்கவேண்டும். சன்ரைசர்ஸ் அடுத்த இரு ஆட்டங்களில் ஒன்றில் தோற்கவேண்டும். இப்படி நடந்தால் மும்பை, தில்லி, பெங்களூர், கொல்கத்தா ஆகிய நான்கு அணிகளும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுவிடும்.

இது சாத்தியமா?

மும்பை இந்தியன்ஸ்

பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ள மும்பை அணி, அருமையான நெட் ரன்ரேட்டால் முதல் இரு இடங்களில் ஒன்றையும் பிடிக்கவுள்ளது. ஏனெனில் தில்லி - பெங்களூர் ஆகிய அணிகள் மோதும் ஆட்டத்தினால் இந்த இரு அணிகளில் ஒன்றுதான் 18 புள்ளிகளைப் பெற முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT