ஐபிஎல்-2020

தில்லி கேபிடல்ஸை விடாது துரத்தும் 'டக் அவுட்'

DIN


தில்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் யாரேனும் ஒருவர் கடந்த சில ஆட்டங்களில் தொடர்ச்சியாக ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வருவது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்து வருகிறது.

நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்தது தில்லி கேபிடல்ஸ். பவர் பிளேவில் பிரித்வி ஷா, நடு ஓவர்களில் கேப்டன் ஷ்ரேயஸ், ரிஷப் பந்த் கடைசி கட்டத்தில் ஷிம்ரோன் ஹெத்மயர், மார்கஸ் ஸ்டாய்னிஸ் என அதிரடிப் பட்டாளமாக இருந்தது.

பந்துவீச்சிலும் பவர் பிளேவில் அன்ரிச் நோர்க்கியா, அக்சர் படேல், நடு ஓவர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின், தொடக்கத்திலும், முடிவிலும் ககிசோ ரபாடா என மிரட்டலான பந்துவீச்சுப் படையுடன் ஜொலித்து வந்தது. இதனால், முதல் 9 ஆட்டங்களில் 7 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் 2 இடங்களை ஆக்கிரமித்து வந்தது.

ஆனால், கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்த தில்லி கேபிடல்ஸ், தற்போது கடைசி 2 ஆட்டங்களில் கட்டாயம் ஒன்றிலாவது வெற்றி பெற வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகியுள்ளது.

இந்த நிலையில், தனது 13-வது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸை தற்போது எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

இதில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். தில்லி பேட்டிங்கில் பிரச்னையாக இருப்பதுவே தொடக்கம்தான்.

தில்லி அணி தொடர் வெற்றிகளைப் பெற்று வந்தபோது, பவர் பிளேவில் பிரித்வி ஷா துரிதமாக ரன் குவிக்க தவான் ஒத்துழைப்பு தந்து விளையாடி வந்தார். இதனால், பவர் பிளே சிறப்பாக அமையும். கடந்த சில ஆட்டங்களில் தில்லி அணி இது இல்லாமல் தவித்து வருகிறது.

தில்லி கடைசியாக விளையாடி 6 ஆட்டங்களில், 5 ஆட்டங்களில் ஏதேனும் ஒரு தொடக்க ஆட்டக்காரர் டக் அவுட் ஆகி ஏமாற்றும் அளித்து வருகிறார். இந்த மோசமான தொடக்கமே தில்லி பேட்டிங்கில் உளவியல் ரீதியாக பிரச்னை ஏற்படுத்தி வருகிறது.

இன்றும் தவான் டக் அவுட் ஆக தில்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

 எதிரணிதொடக்க ஆட்டக்காரர்
1.ராஜஸ்தான் ராயல்ஸ்பிரித்வி ஷா முதல் பந்தில் டக் அவுட்
2.சென்னை சூப்பர் கிங்ஸ்பிரித்வி ஷா 2-வது பந்தில் டக் அவுட்
3.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அஜின்க்யா ரஹானே முதல் பந்தில் டக் அவுட்
4.சன்ரைசர்ஸ் ஹைதராபாத்ஷிகர் தவான் முதல் பந்தில் டக் அவுட்
5.மும்பை இந்தியன்ஸ் (இன்று)ஷிகர் தவான் 2-வது பந்தில் டக் அவுட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேக்ஸ்வெல்லின் முடிவு சரியானது: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஆம் ஆத்மி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கேஜரிவாலும் மனைவியும்!

அடுக்கு மாடிக் கட்டடத்தில் தீ!

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

SCROLL FOR NEXT