ஐபிஎல்-2020

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: சிஎஸ்கே வெற்றியால் மேலும் பரபரப்பாகியுள்ள பிளேஆஃப் போட்டி

DIN

கொல்கத்தா அணியைத் தவிர மற்ற எல்லா அணிகளும் சிஎஸ்கேவின் வெற்றியைத் தான் நேற்று எதிர்பார்த்தார்கள். சிஎஸ்கேவும் முட்டிமோதி கடைசி இரு பந்துகளில் சிக்ஸர்கள் அடித்து வெற்றி பெற்றிருக்கிறது. சிஎஸ்கே ரசிகர்களை விடவும் மும்பை, பெங்களூர், தில்லி, பஞ்சாப், ஹைதராபாத், ராஜஸ்தான் ரசிகர்கள் தான் இந்த வெற்றியை அதிகமாகக் கொண்டாடியிருப்பார்கள்.

ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது.

துபையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வென்றது. சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 72 ரன்கள் அடித்து உதவ, ஜடேஜா அதிரடியாக 31 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா். ருதுராஜ் ஆட்டநாயகன் ஆனாா்.

கடைசி ஓவரில் கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்கிற இக்கட்டான நிலைமையில் இரு சிக்ஸர்கள் அடித்து சிஎஸ்கே அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார் ஜடேஜா. இந்த வெற்றியினால் சிஎஸ்கேவுக்கு ஒரு பலனும் இல்லை. பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறியது வெளியேறியதுதான். ஆனால், சிஎஸ்கேவின் வெற்றியால் மும்பை பிளேஆஃப்புக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றுள்ளது. மும்பை, பெங்களூர், தில்லி, பஞ்சாப், ஹைதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் பிளேஆஃப் போட்டியில் இன்னும் நீடிக்கின்றன. சில அணிகளுக்கான வாய்ப்புகள் தற்போது சுலபமாகியிருக்கின்றன. கொல்கத்தாவும் போட்டியில் இருந்தாலும் இந்தத் தோல்வி அந்த அணியை மிகவும் பாதித்துள்ளது.

இனிவரும் ஆட்டங்களில் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை  அணிகள் ஆட்டங்கள்  வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட்   ரன்ரேட் 
 1. மும்பை 12 8 4 16 +1.186
 2. பெங்களூர் 12 7 5 14 +0.048
 3. தில்லி 12 7 5 14 +0.030
 4. பஞ்சாப் 12 6 6 12 -0.049
 5. கொல்கத்தா 13 6 7 12 -0.479
 6. ஹைதராபாத் 12 5 7 10 +0.396
 7. ராஜஸ்தான்  12 5 7 10 -0.505
 8. சென்னை 13 5 8 10 -0.602

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேளூரில் பாதுகாப்பான தாய்மை தினம்

பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டு பயிற்சி

சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி

பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரி சங்ககிரியில் ஊா்வலம்

SCROLL FOR NEXT