ஐபிஎல்-2020

ஐபிஎல்: சிஎஸ்கேவின் வெற்றியால் பிளேஆஃப்புக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி!

30th Oct 2020 10:30 AM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது.

துபையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வென்றது. சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 72 ரன்கள் அடித்து உதவ, ஜடேஜா அதிரடியாக 31 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா். ருதுராஜ் ஆட்டநாயகன் ஆனாா்.

சிஎஸ்கேவின் அணியின் வெற்றியினால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ள முதல் அணி மும்பை தான். 

ADVERTISEMENT

மும்பை இந்தியன்ஸ் அணி 9 வெற்றிகளைப் பெறுவதற்கு முன்பே பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது. சிஎஸ்கேவுடன் கொல்கத்தா அணி தோல்வியடைந்துள்ளதால் அந்த அணியால் 16 புள்ளிகளைப் பெற முடியாது.

மும்பைக்குப் பின்னால் 14 புள்ளிகளுடன் உள்ள பெங்களூர் - தில்லி ஆகிய இரு அணிகளும் நவம்பர் 2 அன்று மோதுகின்றன. இதனால் இந்த இரு அணிகளில் ஓர் அணியால் மட்டுமே அதிகபட்சமாக 16 புள்ளிகளைப் பெற முடியும்.

பஞ்சாப் அணி மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் வென்று 16 புள்ளிகள் பெற்றாலும் மும்பைக்குப் பாதிப்பு நேராது. சிஎஸ்கேவுடன் கொல்கத்தா தோற்றுள்ளதால் அதிகபட்சமாக மூன்று அணிகளால் மட்டுமே 16 புள்ளிகள் பெற முடியும். இதனால் மும்பை அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றுள்ளது. 

Tags : mumbai IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT