ஐபிஎல்-2020

ருதுராஜின் திறமையை மதிப்பிட முடியாமல் போனதற்குக் காரணம் என்ன?: தோனி விளக்கம்

30th Oct 2020 01:08 PM

ADVERTISEMENT

 

ருதுராஜுக்கு அதிக வாய்ப்புகள் வழங்காதது ஏன் என்பதற்கு சிஎஸ்கே கேப்டன் தோனி விளக்கம் அளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது.

துபையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சென்னை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வென்றது. சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 72 ரன்கள் அடித்து உதவ, ஜடேஜா அதிரடியாக 31 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா். ருதுராஜ் ஆட்டநாயகன் ஆனாா்.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் கெயிக்வாட் 5 ஆட்டங்களில் தான் விளையாடியுள்ளார். முதல் மூன்று ஆட்டங்களில் 0,5,0 என ரன்கள் எடுத்தவர் பிறகு தொடக்க வீரராகக் களமிறங்கி 65*, 72 என இரு அரை சதங்களை எடுத்துள்ளார். 

ருதுராஜுக்கு அதிக வாய்ப்புகள் வழங்காதது குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியதாவது:

ருதுராஜின் ஆட்டத்தை வலைப்பயிற்சியின்போது பார்த்தோம். பிறகு கரோனாவால் அவர் பாதிக்கப்பட்டார். 20 நாள்கள் கழித்து மீண்டு வந்தார். அது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் இந்த ஐபிஎல் போட்டியை அவர் மறக்க மாட்டார். 

நம்மிடையே உள்ள இளம் வீரர்களில் மிகத் திறமையானவர். ருதுராஜிடம் என்ன பிரச்னை என்றால் நிறைய பேச மாட்டார். எனவே சிலநேரங்களில் அணி நிர்வாகத்தால் ஒருவரைப் பற்றி அளவிட முடியாமல் போய்விடுகிறது. இன்னிங்ஸைக் கட்டமைக்கிறபோது, அவரால் தான் நினைத்தபடி விளையாட முடிந்தது. 

முதல் ஆட்டத்தில் கிரீஸை விட்டு முன்னேறி ஆட வந்து ஆட்டமிழந்தார். அழுத்தத்தினால் அப்படி ஆட நினைத்தாரா அல்லது அதுதான் ருதுராஜின் இயல்பான ஆட்டமா எனச் சொல்வது கடினமாக இருந்தது. ஒருவரை மதிப்பிட ஒரு பந்து போதாது என்றார்.

Tags : dhoni
ADVERTISEMENT
ADVERTISEMENT