ஐபிஎல்-2020

இந்திய அணிக்கு விரைவில் தேர்வாக வாய்ப்பு உள்ளது: சூர்யகுமாரைப் பாராட்டும் பொலார்ட்

29th Oct 2020 03:48 PM

ADVERTISEMENT

 

இந்திய அணிக்கு விரைவில் தேர்வாக வாய்ப்பு உள்ளது என்று சூர்யகுமார் யாதவை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொலார்ட் பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 48-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் 8-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

முன்னதாக, முதலில் பேட் செய்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

ADVERTISEMENT

இந்த ஆட்டத்தில் 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார் சூர்யகுமார் யாதவ். இதனால் ஆட்ட முடிவில் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் கிடைத்தது.

ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ள (டி20 தொடா், ஒரு நாள் தொடா், டெஸ்ட் தொடா்) இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தேர்வாகவில்லை. இதற்கு இந்திய ரசிகர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் சமூகவலைத்தளங்களில் தங்களுடைய எதிர்ப்பு வெளிப்படுத்தினார்கள். பல வருடங்களாக திறமையுடன் விளையாடி வரும் சூர்யகுமாரை இந்திய டி20 அணிக்குக் கட்டாயம் தேர்வு செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இந்நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொலார்ட் கூறியதாவது:

ஆரம்பத்திலேயே ஒரு விக்கெட் இழந்து விளையாட வந்த பொலார்ட், இந்த ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார். திரும்பத் திரும்ப என்ன சூழலாக இருந்தாலும் தான் எப்படிப்பட்ட திறமையான கிரிக்கெட் வீரர் என்பதை சூர்யகுமார் நிரூபித்து வருகிறார். இந்திய அணிக்குத் தேர்வாகாததை எண்ணி அவர் நிச்சயம் வருத்தத்தில் தான் இருப்பார். அதேசமயம் அவர் இந்திய அணிக்கு விரைவில் தேர்வாக வாய்ப்புள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அற்புதமான காரியங்களை அவர் செய்துள்ளார். தொடர்ந்து நன்றாக விளையாடுவதில் தான் அவர் கவனம் செலுத்தவேண்டும். இதன்மூலம் அதிக ரன்கள் எடுத்து அணியின் வெற்றிகளுக்கு உதவ வேண்டும். என்னைக் கேட்டால், நாளுக்கு நாள் அவருடைய ஆட்டம் மெருகேறி வருகிறது என்பேன். இதேபோல தொடர்ந்து விளையாடி வந்தால் ஒருநாள் அதற்குரிய பலன் அவருக்குக் கிடைக்கும் என்றார். 

Tags : IPL suryakumar yadav
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT