ஐபிஎல்-2020

கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள்: ஜடேஜா அதிரடியால் சென்னை வெற்றி

DIN


கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜாவின் அதிரடியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.

173 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இந்த இணை பவர் பிளே ஓவர்களில் நல்ல தொடக்கம் தந்து விளையாடியது. வாட்சன் துரிதமாக விளையாடாதபோதிலும் விக்கெட்டை பறிகொடுக்கவில்லை.

முதல் 6 ஓவர்களில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, வருண் சக்ரவர்த்தி வீசிய 8-வது ஓவரில் வாட்சன் (19 பந்துகளில் 14 ரன்கள்) ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, ருதுராஜுடன் அம்பதி ராயுடு இணைந்தார். இருவரும் துரிதமாக விளையாடி ரன் ரேட்டை உயர்த்தினர். இதனால், சென்னை அணி 12 ஓவர் முடிவில் 100 ரன்களை எட்டியது. இதனிடையே ருதுராஜும் 39-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

கம்மின்ஸ் வீசிய 14-வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்த ராயுடு, அதற்கு அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் 20 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனியும் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் வருண் சுழலில் மீண்டும் போல்டானார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. இதன்பிறகு பெரிதளவு பவுண்டரிகள் போகாததால், கடைசி 3 ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்டன. 

இந்த நிலையில், 18-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். 2-வது பந்தில் நன்றாக பேட் செய்து வந்த ருதுராஜ் (53 பந்துகள் 72 ரன்கள்) ஆட்டமிழந்தார். அதேசமயம் அந்த ஓவரில் சென்னைக்கு வெறும் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தன.

ஆனால், பெர்குசன் வீசிய 19-வது ஓவரில் 1 நோ பால் உள்பட 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர்களை ஜடேஜா பறக்கவிட 20 ரன்கள் கிடைத்தன.

இதனால், கடைசி ஓவரில் 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. நாகர்கோடி சிறப்பாக வீச முதல் 4 பந்துகளில் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 5-வது பந்தை ஜடேஜா இமாலய சிக்ஸருக்குப் பறக்கவிட கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே தேவைப்பட்டன. கடைசி பந்தையும் சிக்ஸருக்குப் பறக்கவிட சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜடேஜா 11 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT