ஐபிஎல்-2020

ரோஹித் சர்மா இன்றும் களமிறங்கப்போவதில்லை!

DIN


நடப்பு ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ரோஹித் சர்மா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்திலும் களமிறங்கப்போவதில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கடந்த வாரம் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான இரட்டை சூப்பர் ஓவர் ஆட்டத்தின்போது காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை.

இதனிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா பெயர் இடம்பெறவில்லை. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால், ரசிகர்கள் மத்தியில் ரோஹித் விவகாரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

"ரோஹித் சர்மா, பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்திலும் விளையாட மாட்டார். அவர் தவறாமல் பயிற்சியில் ஈடுபடுகிறார். கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்துக்கு அடுத்த தினம், ஓய்வு தினம் என்பதால் எவ்விதப் பயிற்சியும் இல்லை. ஆனால், மும்பை அணி எப்போதெல்லாம் பயிற்சியில் ஈடுபடுகிறதோ, அப்போதெல்லாம் ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபடுகிறார். வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆட்டத்துக்கான முழு உடற் தகுதியைப் பெறுவதற்கான முயற்சிகளை  அவர் நேர்மையாக மேற்கொண்டு வருகிறார்."

மேலும் ஆஸ்திரேலிய அணிக்குத் தேர்வு செய்யப்படாதது பற்றி கிடைத்த தகவலின்படி, ரோஹித் சர்மா முழு உடற்தகுதியடைய 2 முதல் 3 வாரங்கள் ஆகும் என சுனில் ஜோஷி தலைமையிலான தேர்வுக் குழுவிடம் இந்திய அணியின் பிசியோ நிதின் படேல் தெரிவித்ததாகத் தெரிகிறது. இதன்பிறகே அவர் அணியில் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளார்.

ரோஹித்துக்கு காயம் ஏற்பட்டு ஏற்கெனவே ஒரு வாரத்துக்கு மேல் ஆன நிலையில் அவர் குறைந்தபட்சம் ஐபிஎல் தொடர் முடிவதற்குள் அல்லது ஐபிஎல் தொடர் முடிந்து ஒரு வாரத்துக்குள் முழு உடற்தகுதி பெறலாம். எனினும், அவர் இந்திய அணியில் சேர்க்கப்படாதது சர்ச்சையாகியுள்ளது.

இந்திய அணிக்கான தொடர் எதிர்காலம் என்றாலும், பெங்களூருக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அவர் பங்கேற்கப்போதவில்லை என்பது தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT