ஐபிஎல்-2020

ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள்: பூம்ரா புதிய மைல்கல்

28th Oct 2020 10:04 PM

ADVERTISEMENT


ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரீத் பூம்ரா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (புதன்கிழமை) ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் சிறப்பாக பந்துவீசிய பூம்ரா 4 ஓவர்களில் 1 மைடன் ஓவர் உள்பட 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தியதன்மூலம் 100 ஐபிஎல் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை அவர் எட்டினார்.

பூம்ராவின் முதல் ஐபிஎல் விக்கெட்டும் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : IPL
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT