ஐபிஎல்-2020

நான்கு இடங்களுக்குப் போட்டியிடும் ஏழு அணிகள்: 47 ஐபிஎல் ஆட்டங்கள் முடிந்த பின்பும் நீடிக்கும் பரபரப்பு!

DIN

ஐபிஎல் போட்டி கடந்த மாதம் தொடங்கி இதுவரை 47 ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன.

எனினும் இதுவரை எந்தவொரு அணியும் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. சிஎஸ்கே தவிர அனைத்து அணிகளும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெற போராடிக்கொண்டிருக்கின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ஹைதராபாத் அணி பிளேஆஃப் சுற்று வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஹைதராபாத் அணியின் இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் போட்டி மேலும் சுவாரசியமாகியுள்ளது. ஏழு அணிகள் குறைந்தபட்சம் 10 புள்ளிகளைப் பெற்று பிளேஆப்புக்குப் போட்டியிடுகின்றன. இதுவரை எந்தவொரு அணியும் பிளேஆஃப்புக்குத் தேர்வாகவில்லை.

மும்பை, பெங்களூர், தில்லி ஆகிய மூன்று அணிகளும் 14 புள்ளிகள் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. பஞ்சாப், கொல்கத்தா அணிகள் தலா 12 புள்ளிகளும் ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகள் தலா 10 புள்ளிகளும் பெற்றுள்ளன.

இன்னும் 9 லீக் ஆட்டங்களே மீதமுள்ளன. ஓர் அணியும் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறாததால் 7 அணிகளும் அடுத்து வரும் ஆட்டங்களில் முழுத்திறமைகளை வெளிப்படுத்தி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரன்ரேட் அடிப்படையில் கணக்கிடுவதற்குப் பதிலாக வெற்றியின் மூலம் 2 புள்ளிகள் பெற்று முன்னேறுவதையே ஒவ்வொரு அணியும் விரும்புகின்றன. பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற அணிகள் சில வாரங்களுக்கு முன்பு புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தபோதும் தடாலடியாக சமீபமாக வெற்றிகளை அடைந்து வருகின்றன. இதனால் முன்வரிசையில் உள்ள அணிகளால் அதிக வெற்றிகளைப் பெற்று பிளேஆஃப்புக்குச் செல்ல முடியாத நிலைமை இன்னமும் நீடிக்கிறது. இன்று மும்பையும் பெங்களூரும் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்குப் பிறகு அனைத்து அணிகளும் தலா 12 ஆட்டங்களை ஆடியிருக்கும். சிஎஸ்கே தவிர மீதமுள்ள அணிகள் அடுத்த இரு ஆட்டங்களுக்கு என்ன செய்தால் பிளேஆஃப் வாய்ப்பு உறுதி என்பது தெரிந்துவிடும். 

நவம்பர் 3 அன்று லீக் ஆட்டங்கள் நிறைவு பெறுகின்றன. பரபரப்பான ஆட்டங்களால் ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கு நிச்சயம் குறை இருக்காது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

SCROLL FOR NEXT