ஐபிஎல்-2020

பெளலிங் மேம்பட வேண்டும்: ஸ்டீவ் ஸ்மித் 

DIN


அபுதாபி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெளலிங் மற்றும் ஃபீல்டிங் இன்னும் மேம்பட வேண்டியுள்ளது என்று அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறினார். 

அபுதாபியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான். முதலில் ஆடிய மும்பை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய ராஜஸ்தான் 18.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து வென்றது. 

அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் 107, சஞ்சு சாம்சன் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினார். 

ஆட்டத்துக்குப் பிறகு ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் கூறுகையில், "பெளலிங் மற்றும் ஃபீல்டிங்கில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். ஒரு கேட்ச்சை (ஹார்திக் பாண்டியா விக்கெட்) பிடிக்காமல் விட்டதால் மும்பைக்கு கூடுதலாக 45 ரன்கள் கிடைத்தது. 

மிடில் ஓவர்களில் பெளலர்கள் சிறப்பாகப் பந்துவீசினர். ஆனால் டெத் ஓவர்களில் ரன்கள் அதிகம் கொடுத்துவிட்டோம். இதர பெளலர்கள் ரன்கள் கொடுப்பதை குறைத்து, விக்கெட்டுகள் வீழ்த்தினால் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கான பணிச்சுமை குறையும். சேஸிங்கின்போது ஸ்டோக்ஸ் மற்றும் சாம்சன் விளையாடியது சிறப்பான ஆட்டம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT