ஐபிஎல்-2020

பந்துவீச்சிலும் ஹைதராபாத் மிரட்டல்: 88 ரன்களில் அபார வெற்றி!

DIN


தில்லி கேபிடல்ஸ் அணி 19 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்ததையடுத்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற தில்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

இதன்படி முதலில் பேட் செய்த ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது.

220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தில்லி தொடக்க ஆட்டக்காரர்களாக அஜின்க்யா ரஹானேவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். சந்தீப் சர்மா வீசிய முதல் ஓவரிலேயே தவான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, அதிரடிக்காக மார்கஸ் ஸ்டாய்னிஸ் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். ஆனால், ஷபாஸ் நதீம் வீசிய 2-வது ஓவரிலேயே ஸ்டாய்னிஸ் (5) ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், ரன் ரேட் உயரவில்லை. பவர் பிளேவின் கடைசி ஓவரில் மட்டும் 20 ரன்கள் கிடைக்க, 6 ஓவர்கள் முடிவில் தில்லி அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது.

திருப்புமுனை ஏற்படுத்திய ரஷித் கான்:

7-வது ஓவரை வீசிய ரஷித் கான் முதல் பந்திலேயே ஹெத்மயர் (16) விக்கெட்டை வீழ்த்தினார்.

அதேஓவரின் 5-வது பந்தில் ரஹானே (26) விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதனால், ரிஷப் பந்த் மற்றும் ஷ்ரேயஸ் ஐயருக்கு நெருக்கடி அதிகரித்தது. ஆனால், ஷ்ரேயஸ் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விஜய் சங்கர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ரஷித் கான் சுழலில் அக்சர் படேல் (1) ஆட்டமிழந்தார்.

அடுத்து ரபாடா 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

நெட் ரன் ரேட்டுக்காக பந்த் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 35 பந்துகளில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

துஷார் தேஷ்பாண்டே மட்டும் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 9 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார்.

மற்ற டெயிலண்டர்கள் சோபிக்காமல் ஆட்டமிழந்தனர்.

தில்லி அணி 19 ஓவர்களில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்மூலம், ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஹைதராபாத் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா மற்றும் நட்ராஜன் தலா 2 விக்கெட்டுகளையும், நதீம், ஹோல்டர், விஜய் சங்கர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT