ஐபிஎல்-2020

முடிவுக்கு வந்தது ரபாடாவின் தொடர்ச்சியான விக்கெட் மழை ஆட்டங்கள்!

DIN


தில்லி கேபிடல்ஸ் வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தொடர்ச்சியாக 25 ஐபிஎல் ஆட்டங்களுக்குப் பிறகு முதன்முறையாக இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் 1 விக்கெட் கூட வீழ்த்தவில்லை.

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தில்லி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட் செய்த ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. இதில் தில்லியின் பிரதான வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டை கூட வீழ்த்தாமல் 54 ரன்களை வாரி வழங்கினார்.

இவர் கடைசியாக 2017-இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் 1 விக்கெட் கூட வீழ்த்தாமல் இருந்தார். அதன்பிறகு, தொடர்ச்சியாக 25 ஆட்டங்களில் குறைந்தபட்சம் 1 விக்கெட்டையாவது வீழ்த்தி வந்தார். நடப்பு சீசனிலும் இது தொடர்ந்தது.

இந்த நிலையில், இன்று மீண்டும் ஹைதராபாத்துக்கு எதிராக 1 விக்கெட்டை கூட வீழ்த்தாமல் முற்றுப் புள்ளி வைத்துள்ளார் ரபாடா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT