ஐபிஎல்-2020

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்குத் தேர்வான தமிழகப் பந்துவீச்சாளர்கள்: ரசிகர்கள் குஷி!

DIN

டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருநாள், டி20 அணிகளின் துணை கேப்டனாக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியிலும் ராகுலுக்கு இடம் கிடைத்துள்ளது. 

டெஸ்ட் மற்றும் டி20 அணிகளில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வாகியுள்ளார்கள். வலைப்பயிற்சிக்கு தமிழக வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வாகியுள்ளார்.

டெஸ்ட் அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் வழக்கம் போல இடம்பெற்றுள்ளார். அஸ்வின் இதுவரை இந்திய அணிக்காக 71 டெஸ்டுகள், 111 ஒருநாள், 46 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

ஒருநாள் அணியில் எந்தவொரு தமிழக வீரருக்கும் இடம் கிடைக்கவில்லை.

டி20 அணியில் தமிழக சுழற்பந்து வீச்சாளர்கள் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 21 வயது வாஷிங்டன் இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் ஆட்டத்திலும் 23 டி20 ஆட்டத்திலும் இடம்பெற்றுள்ளார். 29 வயது வருண் சக்ரவர்த்தி முதல்முறையாக இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார்.  

ஏலத்தில் சக்ரவர்த்தியை ரூ. 4 கோடிக்குத் தேர்வு செய்து ஆச்சர்யப்படுத்தியது கொல்கத்தா அணி. ஐபிஎல் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி இந்திய அணிக்குத் தேர்வாகி அனைவரையும் அவர் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

ரூ. 40 லட்சத்துக்கு ஹைதராபாத் அணியில் தேர்வான நடராஜன், வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராகத் தேர்வாகியுள்ளார். பந்துவீச்சாளர் யாருக்காவது காயம் ஏற்பட்டால் நடராஜன் இந்திய அணிக்குத் தேர்வாகக் கூடிய வாய்ப்புண்டு. 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்குத் தேர்வான நான்கு தமிழகப் பந்துவீச்சாளர்களுக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

டெஸ்ட்: ஆர். அஸ்வின்
டி20: வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி
வலைப்பயிற்சி: நடராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

SCROLL FOR NEXT